கலைமானின் அழகும் ஆபத்தும்-Proud Deer and his antlers:-ஒரு நாள் ஒரு கலைமான் காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்துச்சு ,அப்ப அதுக்கு ரொம்ப தாகமா இருந்துச்சு ,
உடனே பக்கத்துல எங்கயாவது தண்ணி கிடைக்குமான்னு தேடிப்பாத்துச்சு ,
அப்ப அங்க இருக்குற குலத்த பாத்து அதுல போயி தண்ணி குடிக்க ஆரம்பிச்சுச்சு ,அப்ப அந்த மானோட பிம்பம் கண்ணாடி மாதிரி அந்த தண்ணில தெரிஞ்சிச்சு.
அந்த பிம்பத்த பாத்த மானுக்கு அடடா நான் எவ்வளவு அழகா இருக்கேன்னு தனக்கு தானே கேட்டுக்கிடுச்சு ,அதோட கொம்போடே அழக பாத்து அதிசயிச்சு போன மான் அப்படியே குனிஞ்சு தன்னோட கால பாத்துச்சு
அடடா எனக்கு எவ்வளவு அழகான கொம்ப கொடுத்த கடவுள் ,இந்த கால மட்டும் அசிங்கமா படச்சுடறேனு வறுத்த பட்டுச்சு.
அப்ப அந்த பக்கமா வந்த புலி அந்த மான பாத்துடுச்சு ,உடனே அந்த மான புடிச்சி திங்க ஓடி வந்துச்சு ,
உயிரை காப்பாத்திக்கிட வேகமா ஓட ஆரம்பிச்சுச்சு மான் ,அப்ப அந்த மானோட கொம்பு காட்டுல இருந்த செடி கொடிகளுக்கு நடுவுல மாட்டிக்கிடிச்சு அப்ப தான் அந்த மானுக்கு புரிஞ்சது
அழகு எப்போதும் ஆபத்துதான் ,அழகு இல்லாட்டியும் நான் ஓடி தப்பிக்க பயன்பட்ட என் கால்களை எனக்கு கொடுத்த கடவுள பளிச்ச எனக்கு சரியான தண்டனை கிடைச்சதுன்னு நினச்சு வருத்தப்பட்டுச்சு
பின்னாடி தொரத்திக்கிட்டு வந்த புலி அந்த மான பிடிச்சி தின்னுடுச்சு