Pei Kadhaigal-Ghost Story for Kids-ஊஞ்சலாடிய பேய்:- ஒரு ஊருல ஒரு அழகான குடும்பம் இருந்துச்சு ,அவுங்க ஒரு புது வீடு வாங்கி அங்க குடிபோனாங்க.
அந்த வீட்டுல இருக்குற மரத்துல குழந்தைகளுக்கு ஒரு ஊஞ்சல் கட்டி விட்டாரு அந்த அப்பா ,உடனே குழந்தைகள் அங்க அழகா விளையாட ஆரம்பிசிச்சாங்க
ஒரு நாள் அந்த பையனுக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சு உடனே வெளிய எட்டி பாத்தான் யாரோ ஊஞ்சல் ஆடுறது மாதிரி இருந்துச்சு ,மறுநாள் பக்கத்துல இருக்குற குளத்துல யாரோ விளையாடுற மாதிரி இருந்துச்சு
இந்த விஷயத்தை தங்களோட அப்பா அம்மா கிட்ட சொன்னாங்க அந்த பையனும் பாப்பாவும்
அப்ப அந்த அப்பா சொன்னாரு உங்களுக்கு தைரியம் இருந்துச்சுன்னா பேய கூட நாம விரட்டிடலாம் ,நீங்க தைரியமா இருக்கீங்களானு கேட்டாரு
நாங்க எப்பவும் தைரியமா இருப்போம்னும் அந்த பாப்பாவும் பையனும் சொன்னாங்க
உடனே பேயே பேயே எங்க கண்முன்னாடி வானு கூப்பிட்டாங்க அந்த அம்மா
உடனே ஒரு குழந்தை ரூபத்துல இருக்குற ஒரு பேய் அவுங்க கண்முன்னாடி வந்துச்சு
நீ எதுக்கு இங்க இருக்குறன்னு கேட்டாரு அந்த அப்பா ,நான் நல்லா படிக்கிற பையன் எனக்கு கணக்கு பரீட்சை ரிசல்ட் வர்ற அன்னைக்கு ஒரு விபத்துல இறந்து போய்ட்டேன் ,
எனக்கு எங்க அம்மாகிட்ட நான் வாங்குன மார்க்க காமிச்சு நல்ல பேர் வாங்கணும்னு ஆச அது நிறைவேறாததால நான் இங்க பேயா சுத்திகிட்டு இருக்கேன்னு சொன்னான்
உடனே அங்க இருந்த எல்லாரும் பக்கத்துல இருந்த ஸ்கூலுக்கு போய் கணக்கு டீச்சரை பாத்து அவனோட மார்க் பேப்பர வாங்கி பாத்தாங்க
அதுல அந்த பையன் அதிக மார்க் வாங்கி இருந்தான் ,
அந்த பையனோட வீட்டு முகவரியை வாங்கிகிட்டு அங்க போய் அவுங்க அம்மா கிட்ட அந்த மார்க்க காமிச்சாங்க
உடனே அவுங்க கண்முன்னாடி அந்த பேய் வந்து அவுங்களுக்கு நன்றி சொல்லிட்டு மறைஞ்சு போய்டுச்சு
குழந்தைகளா பேய்ங்கிறது நம்மள நல்வழி படுத்த கற்பனையா சொல்ல படுற கதை,ஒரு ஆபத்தான இடத்துக்கு நீங்க போக கூடாதுன்னு சின்ன பிள்ளைகளான ஒங்களுக்கு புரிய வைக்கிறது கஷ்டம் ,இது மாதிரி சூழ்நிலையில அங்க பேய் இருக்குன்னு சொல்லி அங்க போக விடாம தடுப்பாங்க பெரியவங்க ,அதனால வீணா பேய நினச்சு பயப்படாம ,பெரியவங்க சொல்படி சமத்தா நடந்துக்கிட்டா கதைகள்ல சொல்ல படுற பேய்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு பொழுதுபோக்குக்கு சொல்ல படுறதுன்ற உண்மை உங்களுக்கே புரியும்