Peacock and Crane Tamil Kids Story மயிலும் கொக்கும்:- ஒரு காலத்துலு ரொம்ப அழகான மயில் ஒன்னு வாழ்ந்துகிட்டு வந்துச்சு

தான் ரொம்ப அழகா இருக்கோம்னு அந்த மயிலுக்கு ரொம்ப கர்வம்
அதனால எல்லா காட்டு விலங்குகலுக்கு முன்னாடியும் தன்னோட பெறுமைய பேசிகிட்டே இருந் துச்சு

இங்க பாத்திங்களா என்னோட தோகை எவ்வளவு அழகா இருக்குன்னு
இங்க பாத்திங்களா என்னோட நிறம் எவ்வளவு அழகா இருக்குன்னு
சொல்லிகிட்டே இருந்துச்சு
அதனா அந்த மயில பாத்திலே மற்ற விலங்குகளுக்கு பிடிக்காது
ஆனா அதப் பத்தி எல்லாம் அந்த மயில் கவலபடாம அது தன்னோட பெறுமைய பேசிகிட்டே இருக்கும்
ஒரு நாள் அது ஒரு கொக்க பாத்துச்சு அந்த கொக்கு கிட்ட போன அந்த மயில்

கொக்கே கொக்கே என் தோகைய பாத்தியா எவ்வளவு அழகா இருக்குன்னு கேட்டுச்சு
அதுக்கு அந்த கொக்கா ஆமா உன்னோட தோகை ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லுச்சு
உடனே அந்த மயில் ஆமா உனக்கு என்ன மாதிரி அழகான தோகை இல்ல பாத்தியானு சொல்லுச்சு
மயில் தன்ன வம்பிலுக்குரத புரிஞ்சகிட்ட அந்த கொக்கு
ஓ மயிலே உன்னோட தோகை மாதிரி எனக்கு தோகை இல்லாம இருக்குலாம் ஆனா எனக்கு உயர பறக்குரதுக்கு உதவுர வலிமையான சிறகுகள் இருக்கு
என்னால அந்த மழை மேகத்த நோக்கி வேகமா பறக்கமுடியும்
மேல இருந்து அந்த அறுவிய பாக்க முடியும்
வானத்துல பறந்து ஒரு இடத்துல இருந்து மற்றொரு இடத்துக்கு வேகமா போகமுடியும் ஆனா
உன்னால அது மாதிரி செய்ய முடியுமானு கேட்டுச்சு
இதக்கேட்ட அந்த மயிலுக்கு அப்பத்தான் உண்மை புரிஞ்சது அடடா வெறும் அழக மட்டும் வச்சிருக்கிர நாம

தனி திறமைகள் வச்சிருக்கிற எல்லா மிருகங்களையும் இத்தனால் மட்டம் தட்டுனமேனு நினைச்சு வருத்தப்பட்டுச்சு
குழந்தைகளா இந்த கதையில் வர்ர மயில் மாதிரி இல்லாம மத்தவங்களையும் மதிக்க பழகிக்கோங்க