Out There or in Here – எங்கே தொலைத்தாய் தமிழ் சிறுகதை :- ஒரு ஊருல ஒரு சாமியார் இருந்தாரு
ஒருநாள் தன்னோட வீட்டுக்கு முன்னாடி எதையோ தேடிகிட்டு இருந்தாரு
அத பாத்த பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் சாமி என்ன தேடுறீங்கன்னு கேட்டாங்க
அதுக்கு அந்த சாமியார் அது என் வீட்டு சாவிய காணோம்னு சொன்னாரு
உடனே எல்லாரும் சேர்ந்து தேட ஆரம்பிச்சாங்க
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒருத்தர் கேட்டாரு ஆமா எந்த எடத்துல சாவிய தோலாசீங்கன்னு கேட்டாரு
அதுவா என் வீட்டுக்கு பின்னாடினு சொன்னாரு
இது என்ன வீட்டுக்கு பின்னாடி தொலைச்சிட்டு இங்க தேடுறீங்கன்னு கேட்டாரு
அது அங்க ரொம்ப இருட்டா இருக்கு,இங்க தான் வெளிச்சமா இருக்கு அதனாலதான் இங்க தேடுறேன்னு சொன்னாரு
என்ன இது இவ்வளவு பெரிய சாமியார் முட்டாள் தனமா பேசுறாருன்னு எல்லாரும் பாத்தாங்க
அப்பதான் அந்த சாமியார் சொன்னாரு நீங்க எல்லாரும் கிட்ட தட்ட என்ன மாதிரிதான் நீங்க உங்க சந்தோசத்த தேட வேண்டிய இடத்துல தேடாம வேற இடத்துல தேடுறீங்கன்னு சொன்னாரு
அவரு சொன்ன விசயத்த கேட்ட எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சாங்க