ஒரு சமயம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நடித்த நல்ல தம்பி’ என்ற திரைப்படம் வெளியூரில் ஒரு வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தது
அந்தப் படத்தில் நடிப்பதற்காக நிறையத் துணை நடிகர்கள் கூட்டமாக வந்திருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணும் அவளது கைக்குழந்தையும் இருந்தனர்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம், நல்ல வெயில் நேரம். அது வயல்வெளிகள் நிறைந்த வெட்ட வெளி என்பதால் ஒதுங்கி நிற்பதற்குக் கூட ஒரு மரம் இல்லை
கலைவாணர் மட்டும் ஒரு வண்ணக் குடையின் நிழலில் அமர்ந்திருந்தார். அந்தக் குடையை வெளியூர் படப்பிடிப்பு சமயங்களில் மட்டுமே பயன்படுத்துவார்
அந்தக் குடையை ஒருவர் பிடித்துக் கொண்டிருக்க அதன் நிழலில் அமர்ந்திருந்த கலைவாணர், வெயிலின் கொடுமை பொறுக்க முடியாமல் தவித்துக் கொண் டிருந்த அந்தப் பெண்ணையும் அவளது கைக்குழந்தை யையும் பார்த்தார்
உள்ளம் பதறிப்போன அவர் ‘சட்’டென்று எழுந்து அந்தப் பெண்ணின் அருகே சென்றார்
“இந்தாங்கம்மா! நீங்க ரெண்டு பேரும் அந்தக் குடை நிழல்லே நில்லுங்க நான் நின்னுக்கறேன்” என்றார் வெளியே
“ஐயோ! வேணாங்க ஐயா!” என்று கூறி மறுத்தார் அந்தப் பெண்மணி
கலைவாணர் கேட்கவில்லை. குடைபிடிப்பவரை
அருகே அழைத்து அவர்களுக்குக் குடைபிடிக்கச் செய்து தான் வெயிலில் நின்று கொண்டார் படப்பிடிப்பு நேரத்தில் மட்டும் அவர்கள் வெயிலில் இருந்துவிட்டு, ஓய்வு நேரத்தில் குடைக்கு
வந்து விட்டனர்.
கலைவாணர் அவர்களுக்கு ஊதியத் தொகையாக ரூ. 25 தான் பேசியிருந்தார். ஆனால் கடைசியில் 100 ரூபாயாகக் கொடுக்க உத்தரவிட்டார்
கொடை வள்ளலாகவே வாழ்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்