No Room in the Bed – Mulla Story – படுக்கையில் இடம் இல்லை முல்லா கதை

No Room in the Bed – Mulla Story – படுக்கையில் இடம் இல்லை முல்லா கதை :- முல்லா உலக புகழ் பெற்ற புத்திசாலியா இருந்தாலும் அவருக்கும் அவரோட மனைவிக்கும் எப்பவும் சண்டையும் சச்சரவுமாவே இருக்கும்

எப்ப சண்டை வந்தாலும் முல்லா தன்னோட புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி ஒவ்வொரு தடவையும் அவரோட மனைவியை ஜெயிச்சு அவுங்கள முட்டாளாக்கி கிட்டே இருந்தாரு

ஒருநாள் சந்தையில முல்லா வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கிறப்ப ,ஒரு மெத்தை வியாபாரி அங்க வந்து கடை விரிச்சாரு ,இத பார்த்த முல்லாவுக்கு தன்னோட வீடு குடிசை வீடா இருந்தாலும் ஒரு மெத்த வாங்கி தரையிலயாவது படுத்து நிம்மதியா தூங்கணும்னு நினைச்சாரு

உடனே முல்லா அந்த வியாபாரிகிட்ட போயி ரெண்டு பேரு படுக்கிற மெத்தை எவ்வளவுன்னு கேட்டாரு ,அதுக்கு அந்த வியாபாரி 200 ரூபாய்னு சொன்னாரு ,அப்பதான் அந்த இருந்த முல்லாவோட நண்பர் சொன்னாரு முல்லா இந்த 200 ரூபா மெத்தைய வாங்கிட்டு போனீங்கன்னா ஒன்னு நீங்க படுபீங்க இல்ல உங்க மனைவி மட்டும்தான் படுக்க முடியும் ,ஏன்னா உங்க மனைவி இந்த கிராமத்துலயே பெரிய குண்டு அம்மானு சொல்லி சிரிச்சாரு

இத கேட்ட முல்லாவுக்கு அதுவும் சரிதான்னு புரிஞ்சிச்சு இருந்தாலும் அவருகிட்ட 500 ரூபா இல்ல உடனே தன்கிட்ட இருந்த 200 ரூபாய்க்கு மெத்தை வியாபாரி சொன்ன சின்ன மெத்தையவே வாங்கிகிட்டு வீட்டுக்கு போனாரு

சாப்பிட்டுட்டு மெத்தைய விரிச்சு படுத்தார் முல்லா ,உடனே அவரோட மனைவியும் அந்த மெத்தையில படுத்தாங்க , அவுங்க ரொம்ப குண்டா இருந்ததால முல்லாவுக்கு கொஞ்சம் இடம் மட்டுமே கிடைச்சுச்சு , ஆனா அவரோட மனைவி அந்த மெத்தையில முக்காவாசி இடத்தை பிடிச்சி படுத்துகிட்டு நிம்மதியா தூங்குனாங்க

ஆனா முல்லா அந்த இடஞ்சல்ல படுத்து சரியா தூங்கவே இல்ல ,உருண்டு உருண்டு படுத்து பார்த்த முல்லா அன்னைக்கு முழுசும் தூங்கவே இல்லை ,மறுநாள் அவரை பார்த்த அவரோட நண்பர் தூங்காத சிவந்து போன முல்லாவோட கண்ண பார்த்ததும் புரிஞ்சிக்கிட்டாரு

என்ன முல்லா கண்ணு எல்லாம் சிவந்து இருக்கு கண்ணுல பஞ்சு எதுவும் விழுந்துடுச்சான்னு சொல்லி கிண்டல் செஞ்சாரு ,முல்லாவுக்கு அசிங்கமா போச்சு ,இருந்தாலும் இன்னைக்கு தன்னோட குண்டு மனைவிக்கு நல்ல பாடம் புகட்டணும்னு நினைச்சாரு,டக்குனு ஒரு ஐடியா முல்லாவுக்கு வந்துச்சு ,உடனே அந்த திட்டத்தை இன்னைக்கு செயல் படுத்தணும்னு முடிவு செஞ்சு வீட்டை நோக்கி நடந்தாரு

வீட்டுக்கு வந்த முல்லா சாப்பிட்டுட்டு மனைவி கூட பஞ்சு மெத்தைய விரிச்சி படுத்தார் ,இன்னைக்கு அவரோட குண்டு மனைவி எல்லா இடத்தையும் பிடிச்சிக்கிட்டு முல்லாவுக்கு கொஞ்சம் இடம் மட்டும் கொடுத்தாரு ,அப்பதான் முல்லா அவரோட திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிச்சாரு ,மெதுவா அவரோட மனைவி தலையை சொறிஞ்சாறு

உடனே தூக்கத்துல இருந்து எழுந்திரிச்ச அவரோட மனைவி முல்லாவ பார்த்து எதுக்கு என்னோட தலையை சொரியிறீங்கன்னு கேட்டாங்க ,ஆனா முல்லா பதில் சொல்லாம தூங்குற மாதிரி நடிச்சாரு ,கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அவரோட மனைவி கைய சொறிஞ்சாறு ,திரும்பவும் தூக்கம் கலைஞ்சு எந்திரிச்ச மனைவி முல்லா தூங்குறத பார்த்ததும் திரும்ப தூங்க போனாங்க ஆனா தூக்கம் கலஞ்சத்தால விடிய விடிய தூக்கம் இல்லாம உக்காந்துகிட்டு இருந்தாங்க

காலையில எழுந்திரிச்ச முல்லா கிட்ட ராத்திரி நடந்தத சொல்லி சண்டை போட்டாங்க ,அதுக்கு முல்லா சொன்னாரு அது உன்னோட தலையா அதான் எனக்கு அரிப்பு எடுத்துச்சுனு சொறிஞ்சேன் ஆனா அரிப்பு அடங்கவே இல்லனு சொன்னாரு ,இத கேட்ட முல்லாவோட மனைவி அது எப்படி என்னோட தலையை உன்னோட தலைனு உங்களுக்கு தோணுச்சுனு கத்த ஆரம்பிச்சாரு

அப்பதான் முல்லா சொன்னாரு நீ எனக்கு கொஞ்சமாவது மெத்தையில இடம் கொடுத்தான முழு மெத்தையையும் நீயே ஆக்ரமிச்சு படுத்துக்கிட்டா என்னோட கை எது ,உன்னோட கை எது ,என்னோட கால் எது ஒன்னோட கால் எதுன்னு எனக்கு தெரியலைனு சொன்னாரு

அப்பத்தான் முல்லாவோட மனைவிக்கு புரிஞ்சது முல்லாவுக்கு இடம் கொடுக்காம மெத்தையில் படுத்துதல தன்னை பலி வாங்குறதுக்குத்தான் இப்படி திட்டம் போட்டு ஒரு ராத்திரி முழுசும் சொறிஞ்சி தன்னோட தூக்கத்த கெடுத்து வச்சிருக்காருனு புரிஞ்சது ,

மறுநாள்ல இருந்து முல்லாவுக்கு படுக்கிற அளவுக்கு இடம் கொடுத்து படுத்து தூங்குனாங்க அவுங்க