Mulla’s Playful Turban – முல்லாவின் தொப்பி

Mulla’s Playful Turban – முல்லாவின் தொப்பி :- முல்லா எல்லாரு கூடையும் நல்லா பழக கூடியவர் அதுவும் குழந்தைகள்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும்

Introduction - Mulla's Love for People and Children, Wife's Disapproval and House Tension

ஆனா அவரோட மனைவிக்கு இது புடிக்கவே இல்ல குழந்தைகளோட விளையாட போறேன்னு சொல்லிட்டு தன்னோட சட்டை எல்லாம் சேறு செகதினு அழுக்காக்கிட்டு முல்லா வர்றதும் ,அத தொவைக்குற அவரோட மனைவி அவரை திட்டுறதும் அந்த வீட்டுல வாடியா இருந்துச்சு

 Mulla Sees Children Under the Tree and Joins Play

ஒரு தடவ தன்னோட வேலை எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டு இருந்தாரு ,அப்ப நிறய குழந்தைகள் மரத்தடியில் உக்காந்து பேசிகிட்டு இருக்குறத பார்த்தாரு ,உடனே அவருக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு உடனே அவரும் அவுங்களோட சேர்ந்து விளையாட ஆரம்பிச்சாரு

Child Asks for a Story, Mulla Tells the Turban and Monkeys Tale

அப்பத்தான் ஒரு குழந்தை ஒரு கதை சொல்லுங்க முல்லானு சொல்லுச்சு உடனே முல்லா அந்த குழந்தைகளுக்கு தொப்பி விக்கிறவரும் குரங்குகளும் கதையை சொன்னாரு ,உடனே எல்லா குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமாகி முல்லாவோட தொப்பிய பிடிங்கிகிட்டு ஓட ஆரம்பிச்சுச்சுங்க

Children Grab Mulla's Turban and Run, Mulla Chases Playfully

முல்லாவும் தன்னோட தொப்பிய பிடுங்க அந்த குழந்தைகளை தொரத்தி விளையாட ஆரம்பிச்சாரு , ஆனா முல்லாவுக்கு ரொம்ப வயசாகிட்டதால அவரால ரொம்ப வேகமா ஓட முடியல ,உடனே அட போங்கடானு சொல்லிட்டு அந்த தொப்பிய நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பி போனாரு முல்லா

Mulla Can't Keep Up, Lets Children Keep the Turban and Heads Home

வீட்டுக்கு வந்ததும் தொப்பி இல்லாம வந்த முல்லாவ பார்த்த அவரோட மனைவி உங்க தொப்பி எங்கன்னு கேட்டாங்க ,உடனே முல்லாவுக்கு ஒன்னு தோணுச்சு ,அடடா குழந்தைகளோட விளையாடிட்டு வந்திருக்கோம்னு நினைச்சா நம்மள இன்னைக்கு பூரா திட்டுவாங்களேன்னு பயந்தார்

Mulla Arrives Home Without Turban, Wife Asks Where It Is, Mulla Gets Scared

உடனே அந்த தொப்பிக்கு தன்னோட குழந்தை பருவம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு அதனால குழந்தைகளோட விளையாட போய்டுச்சுன்னு சொன்னாரு ,முல்லா எதோ தன்கிட்ட மறைக்கிறாருனு புரிஞ்சிகிட்ட அவரோட மனைவி ,ஏன் நீங்க கொஞ்ச நேரம் அது விளையாண்டதும் திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டியது தானேனு கேட்டாங்க

Mulla Remembers Childhood and Explains He Played Due to Memory

அதுக்கு முல்லா சொன்னாரு அதுக்கு இன்னும் கல்யாணம் அகல அதுக்கு பொண்டாட்டி இல்ல ,எவ்வளவு நேரம் குழந்தைகைலோட விளையான்டாலும் அத யாரும் வைய மாட்டாங்க ,அதனால அந்த தொப்பி ரொம்ப சந்தோசமா விளையாண்டுக்கிட்டு இருக்குனு சொன்னாரு முல்லா

Wife Senses Hiding, Asks Why Not Bring Turban Back

இத கேட்ட முல்லாவோட மனைவிக்கு தன்னோட கட்டுப்பாடு முல்லாவுக்கு ரொம்ப தொந்தரவா இருக்குனு எவ்வளவு அழகா தனக்கு புரிய வச்சாருனு நினைச்சு சிரிச்சாங்க ,அன்னையில இருந்து முல்லா குழந்தைகளோட விளையாட போகபோறேனு சொன்னா கூட அவுங்க கோப படாம இருந்தாங்க

Mulla Explains the Turban's "Unmarried" State, Wife Realizes and Smiles