Mulla’s Lost Key – முல்லா காணாமல் போன சாவி:- என்னதான் முல்லா உலக புகழ் பெற்ற அறிஞரா இருந்தாலும் அவரு கூட வாழ்த அவரோட மனைவி கொஞ்சம் முட்டாள் தனமாவே நடந்துக்கிட்டாங்க.

எதாவது பிரச்னை வந்துச்சுனா அந்த பிரச்னை எதனால ஏற்பட்டுச்சு அத எப்படி தீர்க்கலாம்னு யோசிக்காம ,ஐயோ பிரச்னை வந்துடுச்சே ,எனக்கு எதுக்கு இந்த பிரச்னை வந்துச்சுனு பொலம்பிகிட்டே இருந்தாங்க.

ஒருநாள் சமைக்கும்போது பால் பொங்கு வழிய ஆரம்பிச்சுச்சு ,அடடா பால் பொங்கு வீணா போய்டுச்சேனு வருத்தப்பட்டு அழுதாங்க ,

அப்ப அங்க வந்த முல்லா அந்த அடுப்புல இருக்குற ஒரு விறகு கட்டாய வெளியில எடுத்தாரு ,தீ குறைஞ்சு பால் பொங்குறது நின்னுடுச்சு

சின்ன பிரச்னைய கூட பார்த்து பயப்படுற குணத்தை மாத்தணும்னு நினைச்சாரு முல்லா ,மறுநாள் காலையில வைக்கோல் கட்டுகளுக்கு நடுவுல எதையோ தேடிகிட்டு இருந்தாரு முல்லா

அப்ப அங்க வந்தாங்க முல்லாவோட மனைவி , முல்லா இப்ப என்னத்த தொலைச்சிட்டு தேடிகிட்டு இருக்கீங்கன்னு கேட்டாங்க ,அதுக்கு முல்லா சொன்னாரு பீரோ சாவிய தொலைச்சிட்டேன் அதான் தேடிகிட்டு இருக்கேனு சொன்னாரு

உடனே அவுங்களும் முள்ளக்கூட சேர்ந்து காணாம போன சாவிய தேட ஆரம்பிச்சாங்க ,ரொம்ப நேரம் தேடியும் சாவிய கண்டுபிடிக்க முடியல ,அப்பத்தான் முல்லா கிட்ட கேட்டாங்க ஆமா சாவிய எங்க தொலைச்சீங்கனு கேட்டாங்க

அப்பத்தான் முல்லா சொன்னாரு நான் நம்ம வீட்டு வாசல்ல தொலைச்சேன் ,உடனே முல்லாவோட மனைவிக்கு கோபம் வந்துடுச்சு ,சாவிய வீட்டு வாசல்ல தொலைச்சிட்டு ,வைக்கோல் கட்டு பக்கம் தேடுனா எப்படி கிடைக்கும்னு கேட்டாங்க

அதுக்கு முல்லா சொன்னாரு வீட்டு வாசல்ல ரொம்ப இருட்டா இருக்கு ,இங்கதான் நல்ல வெளிச்சமா இருக்கு அதான் இங்க தேடிகிட்டு இருக்கேன்னு சொன்னாரு ,அத கேட்ட முல்லாவோட மனைவி ஏன் இப்படி முட்டாள் மாதிரி பேசுறீங்கன்னு கேட்டாங்க

அப்பத்தான் முல்லா சொன்னாரு இது மாதிரித்தான் நீ தினமும் நடத்துகிற ,பிரச்னையை பார்த்து பயந்து பிரச்னைக்கு முடிவே கண்டு பிடிக்க மாட்டுற ,இது மாதிரி நடந்துக்க கூடாதுனு சொன்னாரு
