Mulla, Why People Yawm-  முல்லா விட்ட கொட்டாவி

Mulla, Why People Yawm-  முல்லா விட்ட கொட்டாவி:முல்லாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க அவங்க எல்லாம் முல்லா ஓட புத்திசாலித்தனத்தை தெரிஞ்சு இருந்தாங்க அதனால மு ல்லாவோட சின்ன சின்ன அசைவுகலுக்கு கூட ஏதாவது காரணம் இருக்குன்னு தெரிஞ்சு வெச்சி இருந்தாங்க

ஒரு நாள் பக்கத்து கிராமத்தில இருந்து ஒரு பெரிய பணக்காரர் முல்லாவை பார்க்க வந்தாரு அவரு புதுசா ஒரு வீடு கட்டி இருக்கிறதாகவும் அதோட திறப்பு விழாவுக்கு முல்லாவ அழைக்க வந்ததாகவும் சொன்னாரு உடனே முல்லாவும் திறப்பு விழாவுக்கு வரேன்னு சொல்லி சொன்னாரு

பக்கத்து ஊர்ல இருக்கிற அந்த பணக்காரரோட புது வீட்டு திறப்பு விழாவுக்கு போன முல்லா அங்க நிறைய நண்பர்கள் இருக்கிறத பார்த்தாரு அவங்கள பார்த்ததும் முல்லாவுக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சு அவங்களோட சேர்ந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தாரு

அப்பத்தான் முல்லா கவனிச்சாரு அந்தப் பணக்காரர் அவரை மாதிரியே நல்ல வசதியானவங்கள மட்டும் நல்லா கவனிச்சு சாப்பிடற இடத்துக்கு கூட்டிட்டு போயி அவங்களுக்கு முதல்ல சாப்பாடு போட்டுக்கிட்டு இருக்கிறத என்னதான் நண்பர்களா இருந்தாலும் வசதி குறைவானவங்கள சரியா கவனிக்காம இருந்தத பார்த்த முல்லாவுக்கு லேசா கோபம் வந்துச்சு

தன்னோட வீட்டு திறப்பு விழாவுக்கு வந்தவங்களையே சரியா கவனிக்காம இப்படி பணக்காரர்களை மட்டும் கவனிச்சா பணக்காரர் எதுக்கு இவங்களையெல்லாம் கூப்பிட்டு இப்படி உட்கார வைக்கணும்னு முல்லா யோசிச்சுகிட்டு இருக்கும்போதே பக்கத்துல இருந்தா நண்பர் ஒருத்தர் கொட்டாவி விட்டார் உடனே இன்னொரு நண்பர் கேட்டாரு என்ன நண்பரே ராத்திரி சரியா தூக்கம் இல்லையா ஏன் இப்படி கொட்டாவி விடுறீங்க அப்படின்னு கேட்டாரு

அப்பத்தான் முல்லா சொன்னாரு சரியா தூங்கலைன்னாலும் கொட்டாவி வரும் சரியா சாப்பிடலைனாலும் கொட்டாவி வரும் ஒரு வேலை ரொம்ப நேரம் பசியோடு இருக்கிறதுநாள  அவருக்கு கொட்டாவி வந்திருக்கும் உங்களுக்கெல்லாம் பசிக்கலையா அப்படின்னு கேட்டாரு

அவங்களும் ஆமாம் பசிக்குது ஆனா இந்த பணக்காரர் வசதி வாய்ந்த வங்களை மட்டும் தான் சாப்பிட கூப்பிட்டு போறாரு அதனால எங்களோட முறை வரட்டும்னு நாங்க காத்துக்கிட்டு இருக்கோம் அப்படின்னு சொன்னாரு உடனே முல்லா சொன்னாரு இந்த பணக்காரருக்கு சரியான பாடம் கேட்கணும்னு நான் நினைச்சிட்டேன் அதனால நான் சொல்ற மாதிரி செய்ங்க அப்படின்னு சொன்னாரு

உடனே பக்கத்துல இருந்த நண்பர்கள் எல்லாம் ஆவலா மாறிட்டாங்க அடடா முல்லா இன்னைக்கு ஏதோ சேட்ட செஞ்சு இந்த பணக்காரரை உண்டு இல்லன  ஆக்கப் போறாரு என்ன நடக்க போகுது அப்படின்னு யோசிச்சுக்கிட்டே என்ன முல்லா நாங்க எல்லாம் இப்ப என்ன செய்யணும் அப்படின்னு கேட்டாங்க

உங்களுக்கு பசிக்குதுன்னு அந்த பணக்காரருக்கு உணர்த்துங்க எல்லாரும் நல்லா வாய திறந்த  கொட்டாவி விட்டுகிட்டே இருங்க குறிப்பா அந்த பணக்காரர் கிட்ட போய் நல்ல கொட்டாவி விடுங்க அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் அப்படின்னு சொன்னாரு உடனே அங்க இருந்த முல்லாவோட நண்பர்கள் எல்லாமரும் முல்லாவோட திட்டம் புரிஞ்சு போயிடுச்சு உடனே அங்கிட்டு இங்கிட்டு நடந்து குறிப்பா பணக்காரர் கிட்ட போயி கொட்டாவி விட்டுகிட்டே இருந்தாங்க

இது என்ன இவங்களுக்கு எல்லாம் என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் ஒரே மாதிரி கொட்டாவி விட்டுகிட்டே இருக்காங்க அப்படின்னு குழம்பிப்போன பணக்காரர் அப்பதான் அங்க முல்லா நின்னுகிட்டு இருக்குறத பாத்தாரு ஆஹா இது எல்லாம் முல்லா ஓட வேலை தான் போல இருக்கு அப்படின்னு சொல்லிட்டு அவன் கிட்ட போய் ஏன் முல்லா எல்லாரும் இப்படி கொட்டாவி விடுறாங்க அப்படின்னு கேட்டாரு

அப்பத்தான் முல்லா சொன்னாரு அவங்க எல்லாம் உழைக்கிற ஏழை மக்கள் அவங்களுக்கு சரியா தூக்கம் இல்லையோ சரியான உணவு இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் உங்க வீட்டுக்கு வந்துட்டு பசியோட தான் அவங்க கொட்டாவி விடுறாங்கன்னு எனக்கு கண்டிப்பா தெரியும் அப்படின்னு சொன்னாரு

அப்பத்தான் அந்த பணக்காரருக்கு புரிஞ்சு போச்சு தான் சுயநலமா நடந்துகிட்டு வசதியானவர்களை மட்டும் கவனிக்கிறத புரிஞ்சுகிட்ட முல்லா தனக்கு இத சூசகமா சொல்லணும்னு நெனச்சு ரொம்ப சூடாவே சொல்லிட்டாரு அப்படின்னு நினைச்ச அந்த பணக்காரர் அவர் கூப்பிட்டு இருந்த எல்லாரையும் கூப்பிட்டு என்னை மன்னிச்சிருங்க ஏதோ புத்தி கெட்டு போய் இப்படி செஞ்சிட்டேன் எல்லாரும் சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டு எல்லாருக்கும் அவர் கையாலே பரிமாறினாரு