Mulla -Was Robbed – முல்லா வீட்டில் திருட்டு

Mulla -Was Robbed – முல்லா வீட்டில் திருட்டு :- முல்லாவும் அவரோட மனைவியும் பக்கத்து ஊருல நடந்த திருவிழாவுக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டு இருந்தாங்க

Mulla and His Wife Returning from the Festival

அப்பத்தான் அவரோட வீட்டு வாசல்ல நிறயபேரு நின்னு எதோ பேசிகிட்டு இருக்குறத பார்த்தாங்க ,அடடா ஏதோ பிரச்னை போலன்னு வேகமா நடந்து வந்து பார்த்பதான் தெரிஞ்சது ,முல்லாவோட வீட்டு பூட்டு ஒடஞ்சு கீழ கிடந்துச்சு கதவு தொறந்து கிடந்துச்சு

Discovering the Crowd and the Break-In

உடனே முல்லா அடடா ஏதோ திருட்டு பய நாம வீட்டுல இல்லாதத தெரிஞ்சிக்கிட்டு நம்ம சேர்த்து வச்சிருந்த பொருள் எல்லாத்தையும் திருடிட்டு போய்ட்டான் போலன்னு சொல்லி வருத்தப்பட்டாரு ,இத பார்த்த முல்லாவோட மனைவி ஓனு அழ ஆரம்பிச்சாங்க

Realizing the Theft and Wife's Grief

அப்பத்தான் அங்க நின்னுகிட்டு இருந்த பக்கத்து வீட்டுக்காரர் கேட்டாரு ,ஏம்மா நீ பூட்ட நல்லா பூட்டல போல இருக்கு ,அதனால தான் அந்த திருடன் சுலபமா வீட்டுக்குள்ள போயி எல்லாத்தையும் திருடிட்டு போய்ட்டானு சொன்னாரு

Neighbor Blames the Poor Locking

உடனே இன்னொரு நண்பர் சொன்னாரு ,என்ன இருந்தாலும் முல்லா பெரிய பூட்டு வாங்கி கொடுத்து இருக்கணும் இப்ப பாருங்க திருடன் ஒரே அடியில சுலபமா பூட்ட உடைச்சி திருடிட்டு போயிருக்கானு சொன்னாரு

Friend Suggests a Bigger Lock

அவருக்கு அடுத்து நின்னுகிட்டு இருந்தவர் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பான இடத்துல வச்சிட்டு ,நீங்க ஊருக்கு போயிருக்கணும் அத விட்டுட்டு திருடு போய்டுச்சுன்னு இப்ப அழுது என்ன புண்ணியம்னு கேட்டாங்க

Another Villager Questions Hiding Valuables

இத எல்லாம் வருத்தத்தோட கேட்டுகிட்டு இருந்த முல்லா அட என்ன இது திருடனை குறை சொல்லாம, திருட்டு கொடுத்த நம்ம எல்லாரும் கிண்டல் செய்யுறமாதிரி இருக்கேனு யோசிச்சாறு

Mulla's Internal Reflection on the Mockery

உடனே வீட்டுக்குள்ள போன முல்லா ஒரு தீப்பெட்டி ,ஒரு விளக்கு ,ஒரு பாட்டில் எண்ணை எல்லாம் எடுத்துக்கிட்டு வெளிய வந்தாரு ,தீப்பெட்டிய ஒருத்தருக்கும் ,விளக்க இன்னொருத்தர் கிட்டயும் ,எண்ணெய இன்னொருத்தர்கிட்டயும் கொடுத்தாரு

Mulla Fetches and Distributes Items

இத பார்த்த எல்லாரும் முல்லா எதுக்கு இப்படி செய்யுறாருனு யோசிக்க ஆரம்பிச்சாங்க ,அப்பத்தான் முல்லா பேச ஆரம்பிச்சாரு ,உங்களுக்கு என் வீட்டுல திருடு போனது வருத்தமே இல்ல ,நீங்க எல்லாம் அந்த திருடன் சுலபமா திருடுனதுலதான் வருத்தம் ,

Villagers Ponder, Mulla Begins His Lesson

நீங்க சொன்ன மாதிரி அடுத்த தடவ ஊருக்கு போகுறப்ப நான் பெரிய பூட்டு வாங்கி நல்லா பூட்டிட்டு ஊருக்கு போறேன் . ஒரு வேல திருடன் வந்தா இருட்டுல அவன் பூட்ட உடைக்க கஷ்டப்படுவான் ,நீங்க மூணு பேரும் சேர்ந்து விளக்கு ஏத்தி அவனுக்கு உதவுங்கன்னு சொன்னாரு

Mulla Explains the Next Time and the Helpers

அப்பத்தான் ஒரு வயதானவர் சொன்னாரு ,ஏப்பா திருடனை விட்டுட்டு திருட்டு கொடுத்தவனை குறை சொல்றத விடுங்கப்பான்னு சொன்னாரு ,அப்பத்தான் எல்லாருக்கும் புரிஞ்சது இந்த விஷயத்தை முல்லா எவ்வளவு அழகா நம்ம எல்லாருக்கும் புரிய வச்சுட்டாருனு நினைச்சு வருத்தப்பட்டாங்க

The Old Man's Realization and Group Regret