Mulla The Sky in a Distant Land – முல்லா வானத்தின் உயரம்

 Mulla The Sky in a Distant Land – முல்லா வானத்தின் உயரம் :- முல்லா ஒருநாள் தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டு இருக்கும்போது தபால் காரர் வந்து ஒரு கடிதத்த முல்லா கிட்ட கொடுத்தாரு

Mulla Working in Garden Postmen Visits him

அத வாங்கி பார்த்த முல்லாவுக்கு ரொம்ப சந்தோசம் , அது அவரோட சின்ன வயசு நண்பர் கிட்ட இருந்து வந்துஇருந்துச்சு ,அவரு தொலைதூர நகரத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அதனால ரெண்டு பேரும் சந்திச்சே ரொம்ப வருஷங்கள் ஆகிடுச்சு ,எப்படா நண்பர பார்க்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்த முல்லாவுக்கு அந்த கடிதம் வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டாரு

Happy Mulla Seeing Friends Letter

அந்த கடிதத்துல முல்லாவோட நண்பர் புதுசா வீடு கட்டி இருக்குறதாவும் ,அதோட திறப்பு விழாவுக்கு முல்லா வரணம்னும் எழுதி இருந்துச்சு ,எப்படா நண்பனை பார்க்க போகலாம்னு இருந்த முல்லா உடனே பட்டணம் போகுறதுக்கு தன்னோட கழுதைய கூட்டிகிட்டு பயணம்போக ஆரம்பிச்சாரு

Mulla Starts Journey with Donkey

ரொம்ப நாள் பயணம் முடிஞ்சு நண்பர் கட்டி இருக்குற வீட்டுக்கு போனாரு முல்லா ,முல்லாவ பார்த்ததும் வரவேற்க்க வந்த அந்த நண்பர் நிறைய நகைகள் போட்டு ஒரு பெரிய பணக்காரரா இருந்தாரு ,முல்லா கழுதைய கூட்டிகிட்டு வந்தத பார்த்த அவரு முல்லாவ பார்த்து ஏளனமா சிரிச்சாரு ,இன்னுமா கழுதை மேச்சிகிட்டு இருக்க இங்க பாரு நான் குதிரைவண்டி ரெண்டு வச்சிருக்கேன்னு சொல்லி அத காமிச்சாரு

Mulla Friend pose as a rich man

வந்த ஒரு நிமிசத்துலயே தான் பார்க்குறது தன்னோட பழகுனா நல்ல நண்பன் கிடையாது இது புது பணக்கார புத்தி கொண்ட வேற ஒரு ஆளுன்னு புரிச்சிக்கிட்டாரு,இருந்தாலும் திறப்பு விழா முடிஞ்சதும் தன்னோட கிராமத்துக்கு திரும்பிடணும்னு நினைச்சாரு

Mulla Served with Mud Plate

அப்பத்தான் எல்லாருக்கும் சாப்பாடு போட ஆரம்பிச்சாங்க ,அங்க வந்திருந்த எல்லாருக்கும் வெள்ளி தட்டுல சாப்பாடு போட்ட பணக்கார நண்பர் முல்லாவுக்கு மட்டும் மண் தட்டுல சாப்பாடு போட்டாரு , ஆனா இத எல்லாத்தையும் கவனிச்சலும் நீண்ட நாள் நண்பனை ஒன்னும் சொல்லாம அமைதியா இருந்தாரு

Mulla Rest in the tarace of the palace

ராத்திரி உணவு முடிஞ்சதும் முல்லாவ வீட்டு விருந்தினர்கள் தங்கி இருந்த அறையில தங்க வைக்காம வீட்டோட மொட்ட மடியில படுத்துக்க சொன்னாரு ,முல்லாவும் அங்க போய் படுத்திக்கிட்டாரு

Mulla Talk about childhood to rich friend

கொஞ்ச நேரம் கழிச்சு அங்க வந்த முல்லாவோட நண்பர் முல்லா கூட பேச ஆரம்பிச்சாரு ,அவரோட பேச்சுல அவர் தன்னோட பணத்தால எல்லாத்தையும் சாதிச்சிகிட முடியும்னு ஒரு திமிர் இருந்துச்சு

அப்பதான் முல்லா பேச ஆரம்பிச்சாரு அங்க பார்த்தியா மூணு நட்சத்திரங்கள் எவ்வளவு அழகா இருக்கு ,உனக்கு ஞாபகம் இருக்க நாம சின்ன வயசுல பார்குறப்ப எப்படி அழகா இருந்துச்சோ அதே மாதிரி இப்பவும் அழகா இருக்கு

Rich Firend Got Sad

இந்த மாதிரி அற்புதமான அழக படைச்ச இறைவனுக்கு அப்புறமா நீதான் பெரிய ஆழா இருக்க நீயும் ஒருநாள் இந்த மாதிரி நட்சத்திரங்கள படைக்கிற அளவுக்கு முன்னேற வாழ்த்துக்கள்னு சொன்னாரு ,

அப்பத்தான் அந்த பணக்கார நண்பருக்கு புரிஞ்சது , பணம் சேர்ந்ததும் தன்னோட குணம் மாறி போனதையும் , சிறு வயசுல இருந்த நல்ல குணங்கள் இப்ப இல்லைங்கிறதையும் முல்லா குத்தி காட்டுறாருனு,உடனே அவரோட முகம் சோர்ந்து போச்சு

Mulla starts the return journey

முல்லா மறுநாள் அங்க இருந்து கிளம்புற வரைக்கும் அமைதியவே இருந்த அவரு தன்னோட குணத்த மாத்திக்கிடணும்னு முடிவு செஞ்சு அன்னைல இருந்து புது மனிதனா வாழ்க்கையை தொடங்குனாரு