Mulla The Centre of Universe – உலகத்தின் நடுப்பகுதி-முல்லா கதை

Mulla The Centre of Universe – உலகத்தின் நடுப்பகுதி-முல்லா கதை :-முல்லாவோட புகழ் உலகமெல்லாம் பரவி இருந்ததனால வெளிநாட்டுல இருந்த படிச்ச அறிவாளிகள் கூட முல்லாவை பத்தி தெரிஞ்சுக்கணும் அப்படின்னு ஆவலா இருந்தாங்க அவங்களுக்கெல்லாம் இப்படி ஒரு புத்திசாலிய போட்டி போட்டு நம்ம ஜெயிச்சுட்டோம்னா நம்ம தான் இந்த உலகத்திலேயே பெரிய அறிவாளின்னு எல்லாரும் சொல்லுவாங்க அப்படின்னு ஒரு நப்பாச இருந்துச்சு

The Spread of Mullah's Fame

அதனாலயே அடிக்கடி வெளிநாட்டில் இருந்து வர்ற படிச்ச மேதாவிகள் முல்லாகிட்ட போட்டி போடுவாங்க எப்பயும் தன்னோட அறிவ பயன்படுத்தி அவங்கள ஜெயிக்கிற முல்லா சில சமயம் அவங்க விதண்டாவாதம் செய்யறத பார்த்தானா அவங்களுக்கு ஏடாகூடமான பதிலைச் சொல்லி அவங்கள குழப்பி முட்டாளாக்கி திருப்பி அனுப்புவாரு இது முல்லாவோட பழக்கம் அப்படி இருக்க பத்தா ஒரு நாள் முல்லா கூட போட்டி போடுறேன்னு சொல்லிட்டு வெளிநாட்டிலிருந்து ஒரு மேதாவி வந்தாரு

The Arrival of the Scholar

சந்தைக்கு நடுவுல வந்து நின்னவரு எங்க அந்த முல்லா சாதாரண சந்தையில வியாபாரம் செய்யற அவரு உலகத்திலேயே பெரிய புத்திசாலியா எங்கிட்ட வந்து அவரோட அறிவை காட்டட்டும் அப்படின்னு இருமாப்பா பேச ஆரம்பிச்சாரு, இத பாத்தா சந்தையில் வியாபாரம் பார்த்துகிட்டு இருந்த எல்லா வியாபாரிகளும் ரொம்ப சந்தோசமா ஆயிட்டாங்க அடடா முல்லா கிட்ட தோத்து போறதுக்கு இன்னொரு ஆள் வந்திருக்கான்பா அப்படின்னு சொல்லிட்டு வேக வேகமாக ஓடிப் போயி முல்லாவை கூட்டிட்டு வந்தாங்க

The Scholar's Arrogant Challenge

அப்பத்தா அந்த படிச்ச மேதாவி சொன்னாரு ஓஹோ நீங்க தான் முல்லாவா என் கூட அறிவு சம்பந்தமா போட்டி போட்டு ஜெயிச்சு காட்டிடுங்க பார்ப்போம் அப்படின்னு கேட்டாரு உடனே முல்லா சொன்னாரு சரிப்பா கேள்வி நீ கேக்குறியா இல்ல நான் கேட்கட்டுமா அப்படின்னு சொன்னாரு முல்லா

The Debate Begins

அதுக்கு அந்த மேதாவி சொன்னாரு நான் கேட்கிற கேள்விக்கு மொத பதில் சொல்லுங்க உலகமெல்லாம் சுத்தி அறிவ வளர்த்துக்கிட்டு வந்திருக்கிற என்ன கேட்கிற தகுதி உங்களுக்கு கிடையாது சாதாரண சந்தையில வியாபாரம் பார்த்து பிழைப்பு நடத்துற உங்க கேள்விக்கு பதில் சொல்லவும் எனக்கு விருப்பமில்லை அப்படின்னு சொன்னாரு அந்த வெளிநாட்டு மேதாவி

The Scholar's Refusal

அப்பத்தான் முல்லாவுக்கு புரிஞ்சது இந்த ஆளு இருமாப்புல வந்திருக்காரு இவரு நல்லபடியா பதில் சொன்னமுனா ஏத்துக்க மாட்டாரு இவரை நம்ம வழிப்படி சேட்ட செஞ்சு அனுப்பினா தான் நல்லா இருக்கும்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டாரு

Mullah's Realization

அப்பத்தான் அந்த வெளிநாட்டு மேதாவி கேட்டாரு உலகத்தோட நடு பகுதி எது அப்படின்னு கேட்டாரு கொஞ்சம் கூட யோசிக்காம முல்லா சொன்னாரு அங்க என் கழுதை கட்டி வச்சிருக்கேன் பாருங்க அதோட கால் பகுதியில இருக்கிறது தான் இந்த உலகத்தோட நடுப்பகுதி அப்படின்னு சொன்னாரு

The Clever Question

இதைப் பார்த்த சந்தை வியாபாரிகள் எல்லாம் அடடா முல்லா தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டாரு அப்படின்னு நினைச்சாங்க முல்லாவோட பதிலை கேட்ட அந்த மேதாவி சொன்னாரு அது எப்படி நீ கழுத கட்டி இருக்க இடம் தான் உலகத்தோட நடு சென்டர் நடுப்பகுதின்னு சொல்லுவ நிரூபிச்சு காமிக்க முடியுமா அப்படின்னு கேட்டாரு

The Villagers' Amusement and Scholar's Doubt

அதுக்கு முல்லா சொன்னாரு அதுதான் நடுப் பகுதின்னு நான் சொல்றேன் அது இல்லைன்னு நீங்க சொன்னீங்கன்னா நீங்க தான் நிரூபிச்சு காமிக்கணும் அப்படின்னு சொன்னாரு முல்லா , இந்த பதில எதிர் பார்க்காத அந்த மேதாவினால பதில் சொல்லவே முடியல மெதுவா மேடையில் இருந்து கீழே இறங்குனவரு தன்னோட நாட்ட பார்த்து நடக்க ஆரம்பிச்சாரு

The Counter Challenge

அவர் சந்தைய விட்டு போற வரைக்கும் சந்தை வியாபாரிகள் கைதட்டி சிரிக்கிறத கேட்டுகிட்டே அவமானப்பட்டுட்டு போனாரு இந்த செய்தியை அவரோட நாடு வரைக்கும் கேட்டுச்சு அன்னையிலிருந்து ஏண்டா இந்த முல்லா கிட்ட போட்டி போட்டோம்னா தினம் தினம் வருத்தப்பட்டார் அந்த மேதாவி