Mulla Rewards His Wife-quick bedtime stories : முல்லா கொடுத்த பரிசு :- முல்லா கிட்ட போட்டி போட்டு நிறய அறிஞர்கள் தோத்து போயிருக்காங்க ,அதுல முல்லாவோட மனைவியும் அடக்கம் ,அவுங்களும் முல்லா கிட்ட வாய் சண்டைக்கு போயி நிறய தடவ தோத்து போயிருக்காங்க

ஒருநாள் சந்தையில ரொம்ப நேரம் வியாபாரம் செஞ்ச முல்லா ரொம்ப சோர்ந்து போய்ட்டாரு ,மெதுவா தன்னோட கழுதையோட வந்த முல்லா இன்னைக்கு நல்லா சாப்பிட்டு தூங்கி ஓய்வெடுக்கணும்னு நினைச்சிகிட்டே வீட்டுக்கு வந்தாரு ,

வீட்டு வாசல் கிட்ட வந்ததுமே கோழி கறி கொளம்பு வாசனை தூக்குச்சு

அடடா நம்ம மனைவி இன்னைக்கு நமக்கு கோழி கறி கொளம்பு செஞ்சு இருக்காங்க இன்னைக்கு ஒரு புடி புடிக்கணும்னு கை கால் கழுவிட்டு சாப்பிட உக்காந்தாரு ,

உடனே முல்லாவோட மனைவி அவருக்கு சாப்பாடு போட்டு கோழி கொளம்பு ஊத்துனாங்க ,அத சாப்பிட ஆரம்பிச்சாரு முல்லா

அடடா இது என்ன அதிசயம் இன்னிங்க்கு குளம்னு ரொம்ப சுவையா இருக்கு ,நீ எப்பயும் கேவலமா சமைப்பனு முடிவு செஞ்சு இருந்தேன் ஆனா இன்னைக்கு எனக்கு புடிச்ச மாதிரி சமைச்சு இருக்க ,உனக்கு நான் ஒரு பரிசு கொடுக்கலாம்னு இருக்கேன் உனக்கு என்ன வேணும் என்னால கொடுக்க முடிஞ்சா பரிசா கேளு உனக்கு தாரேன்னு சொன்னாரு

நல்லா யோசிச்சு சொல்லணும் என்னால கொடுக்க முடியாதத கேட்டன என்னால கொடுக்க முடியாதுனும் சொன்னாரு முல்லா ,உடனே முல்லாவோட மனைவி எனக்கு ஒரு நாள் நேரம் கொடுங்க யோசிச்சு கேக்குறேனு சொன்னாரு ,உடனே முல்லாவும் சரினு சொல்லிட்டு ,சாப்பாட்ட முடிச்சிகிட்டு படுத்து ஓய்வெடுத்தாரு

ராத்திரி முழுசும் தூங்காம முல்லாவோட மனைவி என்ன பரிசு கேட்கலாம்னு யோசிச்சாங்க ,எதாவது தப்பா கேட்ட இந்த முல்லா நம்மள ஏமாத்திட்டு போயிருவாருனு அவுங்களுக்கு தெரிஞ்சு இருந்தது அதனால ரொம்ப நேரம் நல்லா யோசிச்சு ,முல்லா கையில இருந்த மோதிரத்தை கேக்கலாம் ,அது அவரால கொடுக்க முடிஞ்ச பரிசு தானே அத கண்டிப்பா கொடுப்பாருனு நம்புனாங்க

மறுநாள் காலை விடிஞ்சதும் எழுந்திரிச்ச முல்லா கிட்ட உங்க கையில போட்டு இருக்குற மோதிரத்தை எனக்கு பரிசா கொடுங்கன்னு கேட்டாங்க முல்லாவோட மனைவி ,அப்பத்தான் முல்லாவோட சுய ரூபம் அவுங்களுக்கு புரிஞ்சது

உனக்கு என்னால கொடுக்க முடிஞ்ச பரிசு ஒண்ணுதான் கொடுக்குறேனு சொன்னேன் , அதே மாதிரி நேத்தே யோசிக்கிறதுக்கு ஒரு நாள் நேரம் கேட்ட நானும் கொடுத்தேன் ,அது தான் நான் ஒனக்கு கொடுத்த பரிசு ,இப்ப எதுக்கு திரும்பவும் பரிசு கேக்குறன்னு கேட்டாரு

இத கேட்ட முல்லாவோட மனைவிக்கு தலையே சுத்திடுச்சு ,இந்த ஆளோட குணம் தெரிஞ்சும் ராத்திரி முழுசும் தூங்காம யோசிச்சத நினைச்சு வறுத்த பட்டாங்க
