Mulla Rescues the Moon – நிலவை காப்பாத்திய முல்லா :- உலக புகழ் பெற்ற முல்லா மிகுந்த புத்திசாலியா இருந்தாலும் தன்னோட குடிசை வீட்டுல அமைதியான வாழ்க்கைதான் வாழ்ந்துகிட்டு வந்தாரு

ரொம்ப நல்ல மனிதனான முல்லா எப்பவும் அடுத்தவங்களுக்கு உதவி செய்யுறதுல ரொம்ப சந்தோச பட்டாரு , முல்லா கிட்ட உதவி கேட்டு அந்த கிராமத்து ஆளுங்க மட்டும் இல்லாம பக்கத்து ஊர் காரவங்களும் அங்க வந்தாங்க

உதவி கேட்டு வந்தவங்க கிட்ட தீர விசாரிச்சு தான் உதவு செய்வாரு முல்லா ,யாராவது சோம்பேறி தனமா , பேராசையோட முல்லா கிட்ட உதவி கேட்டா அவுங்கள தன்னோட நையாண்டி தனத்தால கேவலப்படுத்தி அனுப்பி வைப்பாறு முல்லா

தொடர்ந்து இது மாதிரி உதவி செஞ்சுகிட்டு வந்த முல்லாவுக்கு உதவி செய்யுறது ஒரு அனிச்சை செயலாவே மாறிடுச்சு ,ஒவ்வொரு நாளும் குறைஞ்சது ஒருத்தருக்காவது உதவி செய்யணும்னு தீர்மானம் செஞ்சு உதவிகள் செஞ்சாரு முல்லா

ஒருநாள் அந்த ஊருல பெரிய மழை பெஞ்சுச்சு அதனால் குடிசை வீட்டுல இருந்தவங்க எல்லாம் வேறு இடத்துல போய் தங்கி கிட்டாங்க ,மேடான இடத்துல இருந்த முல்லா மட்டும் அங்கேயே இருந்தாரு ,ஆனா காலையில இருந்து யாருக்கும் உதவி செய்யாத முல்லாவுக்கு ரொம்ப வருத்தமா போச்சு

மெதுவா நடந்து கிராமத்த சுத்தி நடந்து பார்த்தாரு ,எல்லாரும் அவுங்க வீட்டுக்குள்ள இருந்தாங்க ,யாருக்காவது ஒரு சின்ன உதவி செஞ்சா நிம்மதியா இருக்கும்னு நினைச்ச முல்லாவுக்கு யாருமே இல்லாததால உதவி செய்ய முடியல ,அந்த வருத்தத்துல நடந்து வந்த முல்லா ஊர் பொது கிணத்துக்கு வந்தாரு

அதுக்குள்ள பார்த்த முல்லா அதுல இருந்த தண்ணியில தெரிஞ்ச நிலாவோட பிம்பத்தை பார்த்தாரு , ஓஹ் நிலவே தண்ணியில விழுந்துட்டியானு கேட்டுக்கு கிணத்துக்குள்ள இறங்கி தண்ணிய கலக்கி விட்டாரு ,

தண்ணிய கலக்கி விட்டுட்டு வானத்தை பார்த்தாரு அங்க நிலா பிரகாசமா இருந்துச்சு ,யாருக்காவது உதவி செஞ்சே தீரணும்னு தீர்மானத்துல இருந்த முல்லா நிலவுக்கு உதவி செஞ்சதா நினைச்சி மனச தேத்திகிட்டு வீட்டுக்கு போய்ட்டாரு

குழந்தைகளா நீங்களும் ஒரு நாளைக்கு ஒரு உதவியாவது யாருக்காவது செய்யுங்க ,உங்க அப்பாவுக்கு பேனா எடுத்து கொடுக்குறது ,அம்மாவுக்கு சமையல் செய்ய உதவி ,வயதான தாத்தா பாட்டி இருந்தா அவுங்களுக்கு தண்ணி மோந்து கொடுக்குறதுனு சின்ன சின்ன உதவிகள் செய்ய ஆரம்பிங்க
We like the stories for our kids. It is so simple and guide them with good things.