Mulla Lot of Space : வீட்டில் இடம் இல்ல – முல்லா கதை

Mulla Lot of Space : வீட்டில் இடம் இல்ல – முல்லா கதை :-முல்லாவுக்கு காரணமே இல்லாம எதையாவது நினைச்சு புலம்பிக்கிட்டே இருக்கிறவங்கள பார்த்தா பிடிக்கவே பிடிக்காது அவங்களுக்கு தக்க அறிவுரை சொல்லி மாத்த பார்ப்பாரு அப்படி இல்லைன்னா அவரோட வழியில அவங்களுக்கு புரிய வைப்பாரு

Mullah Observing the Merchant

அப்படித்தான் ஒரு நாள் முல்லா வீட்டு வாசலில் உட்காந்து இருந்தாரு அவர் எதிர்த்த வீட்டில் வசிச்சிகிட்டு இருந்த ஒரு வியாபாரி லபோ திபோன்னு கத்திக்கிட்டு இருக்கிறதை பார்த்தாரு முல்லா

Mullah Inquires About the Problem

எதுக்குங்க இவ்வளவு சத்தம் போட்டு கத்திக்கிட்டு இருக்கீங்க என்ன பிரச்சனை அப்படின்னு கேட்டாரு முல்லா அதுக்கு அந்த வியாபாரி சொன்னாரு என்னோட குழந்தைகள் மூணு குழந்தைகள் இருக்கு அதுங்க இப்ப வளர ஆரம்பிச்சிருச்சுங்க என்னோட வீடு பத்த மாட்டேங்குது,எல்லாரும் படுத்து தூங்க கூட போதுமான இடம் இல்லை

Merchant Explains His Family Woes

நிம்மதியா படுத்து தூங்க கூட முடியல என் பிள்ளைங்க இடிக்குது அங்கிட்டு திரும்பினால் சுவர் இடிக்குது நான் எங்கதான் படுத்து தூங்குறதுன்னு கேட்டு பொலம்ப ஆரம்பிச்சாரு இத கேட்ட முல்லா இது எல்லாம் ஒரு பிரச்சனையா அப்படின்னு பார்த்தாரு

Mullah's Idea Sparks

அப்பத்தா முல்லாவுக்கு ஒரு நல்ல யோசனை வந்துச்சு உடனே அதுக்கு என்கிட்ட ஒரு சுலபமான வழி இருக்கு அதைக் கேட்டனா உன் வீட்டுல ரொம்ப நல்ல இடவசதியுடன் இருக்கலாம் நான் சொல்றத கேப்பியா அப்படின்னு கேட்டாரு முல்லா

Merchant Eagerly Agrees

அதுக்கு அந்த வியாபாரி சொன்னாரு ஐயா நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் எனக்கு நிம்மதியான தூக்கம் வேணும் எதோ ஐடியா இருக்குன்னு சொன்னீங்களே அத சொல்லுங்க அப்படின்னு சொன்னாரு அந்த வீட்டுக்காரர்

 Mullah Delivers the Advice

உடனே முல்லா சொன்னாரு நீ வளத்துக்கிட்டு வர்ற கோழிகளையும் நீ வளக்குற கழுதயும் நீ வளர்க்கிற கண்ணு குட்டியையும் ஆட்டுக்குட்டியயும் உன் வீட்டுக்குள்ளேயே கொண்டு போய் கட்டி வச்சுக்க அதோட நாலு நாள் இருந்து பாரு நான் என்ன சொல்ல வரேன்றது உனக்கு புரியும் அப்படின்னு சொன்னாரு

Merchant Implements the Plan

இத கேட்ட அந்த வியாபாரிக்கு இது பைத்தியக்காரத்தனம் அப்படின்னு தோணுச்சு இருந்தாலும் முல்லா சொல்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலையும் எல்லாருக்கும் நல்லது தான் நடந்திருக்கு அப்படின்னு தெரிஞ்சு வச்சிருந்த அந்த வியாபாரி முல்லா சொன்ன மாதிரியே எல்லா வீட்டு மிருகங்களையும் தன்னோட வீட்டுக்குள் அடைச்சுக்கிட்டு இடைஞ்சல்லயே அன்னைக்கு படுத்து தூங்கினாரு

Sleepless Morning and Adjustment

ராத்திரி முழுசும் தூக்கம் இல்லாமல் கண்ணு எல்லாம் சிவந்து போயி காலையில வாசல்ல உட்கார்ந்து இருந்தாரு அந்த வியாபாரி அதை பார்த்த முல்லா சொன்னாரு சரி சரி பரவால்ல இன்னைக்கு ஒரு நாள் உன்னோட கண்ணுகுட்டிய மட்டும் வெளிய கட்டிரு மத்த எல்லா மிருகங்களும் உள்ளேயே இருக்கட்டும் அப்படின்னு சொன்னாரு

Better Sleep Reported

மறுநாள் காலையில வாசல்ல உக்காந்து இருந்த அந்த வியாபாரி கிட்ட என்னப்பா நேத்து நல்லா தூங்கினியா அப்படின்னு கேட்டார் ஏதோ பரவாயில்லை முந்தா நாள விட இன்னைக்கு கொஞ்சம் இட வசதி இருந்துச்சு கொஞ்சம் நல்லா தூங்க தான் செய்தேன் அப்படின்னு சொன்னாரு அந்த வியாபாரி

Next Step - Donkey Outside

அத கேட்ட முல்லா அப்ப இன்னைல இருந்து உன்னோட கழுதையும் சேர்த்து வெளியில கட்டி வச்சிரு இன்னும் கொஞ்சம் இட வசதி கிடைக்கும் அப்படின்னு சொன்னாரு அதைக் கேட்ட அந்த வியாபாரியும் அப்படியே செஞ்சாரு

Improved Comfort Acknowledged

அதுக்கு அடுத்த நாள் காலையில வாசலில் உட்கார்ந்து இருந்த அந்த வியாபாரி கிட்ட என்னப்பா உன் வீட்டில் இன்னைக்கு இட வசதி கிடைசுச்ச்சா நிம்மதியா தூங்குனியா அப்படின்னு கேட்டாரு அதுக்கு அந்த வியாபாரி சொன்னாரு ஐயா நேத்து நல்ல இடவசதி இருக்கத்தான் செஞ்சுச்சு அப்படின்னு சொன்னாரு

அப்பன்னா இன்னைல இருந்து எல்லா மிருகங்களையும் பறவைகளையும் வெளியவே கட்டிவச்சுரு இன்னைக்கு தூங்கி எந்திரிச்சு என்ன நடந்துச்சு நாளைக்கு என்கிட்ட வந்து சொல்லு அப்படின்னாரு

Final Adjustment Advice

எல்லா மிருகங்களோடையும் வீட்டுக்குள்ளே இடைஞ்சலுக்குள்ள படுத்து கிடந்த அந்த வியாபாரி மிருகங்கள் இல்லாம அன்னைக்கு நிம்மதியா தூங்கினாரு மறுநாள் காலையில தூக்க கலக்கத்துல வாசல்ல உக்காந்த வியாபாரி கிட்ட வந்து முல்லா கேட்டாரு என்னப்பா தூக்க கலக்கமா இருக்க நைட்டு ரொம்ப நேரம் தூங்குன போல இருக்கு அப்படின்னு கேட்டாரு

Peaceful Realization

அப்பத்தான் அந்த வியாபாரி சொன்னாரு ஐயா என்னோட வீடு எனக்கு போதுமானதாக இருந்துச்சு ஒவ்வொருத்தரும் அனுகுற முறையிலதான் அவங்க அவங்க பிரச்சினைகள் எல்லாம் தீருங்குறத எனக்கு சுலபமா உணர்த்திட்டீங்க அப்படின்னு சொன்னாரு

நம்ம கிட்ட இருக்கிறத வச்சு எப்படி வளமா வாழலாம் அப்படிங்கறத விளக்கறதுக்காக இந்த கதை எழுதி இருப்பாங்க போல இருக்கு