Mulla in the Rose Garden- முல்லாவின் நல்ல நம்பிக்கை

Mulla in the Rose Garden- முல்லாவின் நல்ல நம்பிக்கை :- வேடிக்கையாகவும் விவேகமாகவும் சொல்லப்படும் முல்லா கதைகள் எப்போதும் தன்னம்பிக்கை ஊட்டும் கதைகளாகவே இருக்கின்றன

Mulla Walking and Spotting the Rose Garden

முல்லா ஒருநாள் சந்தையில இருந்து வீட்டுக்கு நடந்து வந்துகிட்டு இருந்தாரு அப்ப பக்கத்துல ஒரு பூந்தோட்டத்த பார்த்தாரு ,அதுல நிறய ரோஜா செடி வளர்ந்து இருந்துச்சு ,அதுல பூத்து இருந்த எல்லா ரோஜாவும் புதுசா அழகா இருந்தத பார்த்த முல்லாவுக்கு ரொம்ப சந்தோசம் வந்துடுச்சு

Entering Garden, Admiring Roses, Tripping and Falling

இன்னும் கொஞ்சம் நேரம் அந்த ரோஜா தோட்டத்தை ரசிக்கலாம்னு நினைச்ச முல்லா அந்த தோட்டத்துக்குள்ள போனாரு ,ஒவ்வொரு கலர் ரோஜா பூவையும் பார்த்து முல்லாவோட மனசே லேசா ஆகிடுச்சு ,ரோஜாக்களோட அழகுல சொக்கிப்போன முல்லா அங்க இருந்த ஒரு பெரிய கல்ல பார்க்க மறந்துட்டாரு ,தடார்னு அந்த கல்லுல தன்னோட கால இடிச்சிகிட்ட முல்லா அங்க இருந்த ரோஜா செடிகளுக்கு மேல விழுந்துட்டாரு

Thorns Tearing Clothes, Mud Sticking

ரோஜா செடி மேல விழுந்ததால ரோஜா செடியில இருந்த எல்லா முள்ளும் முல்லா உடம்பு முழுசும் கிழிச்சி ரெத்தம் வந்துடுச்சு ,ரோஜா செடிகளுக்கு அப்பதான் தண்ணி ஊத்தி இருந்ததால அதுல இருந்த சேர் சகதி எல்லாம் முல்லாவோட வெள்ளை சட்டையில் ஒட்டி கிடுச்சு

Getting Up and Thinking Positively While Walking

மெதுவா சுதாரிச்சு எழுந்த முல்லா அடடா இன்னைக்கு நாம் கீழ விழுந்து சகதியில புரளனும்னு விதி இருக்கும்போல ,நல்ல வேலையா இந்த தோட்டத்துக்குள்ள வந்தோம் ,இல்லைனா ரோட்ல விழுந்து அங்க போற வாகனங்கள் நம்ம மேல ஏறி பெரிய விபரீதம் நடந்து இருக்கும்னு தனக்குள்ளேயே சொல்லிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சாரு

Washing Mud at the Pipe, Hanging Shirt

அப்ப அங்க ஒரு குழாயில் தண்ணி வர்றத பார்த்தாரு உடனே தன்னோட உடம்புல ஒட்டி இருந்த சகதியை கழுவலாம்னு அங்க போனாரு முல்லா ,மெதுவா அவரோட சட்டையை கழட்டி சகதிய கழுவுன முல்லா மெதுவா அங்க இருந்த மரத்துல காய போட்டாரு

Monkey Stealing Shirt, Mulla's Positive Reaction

இத எல்லாம் பார்த்துகிட்டு இருந்த ஒரு குரங்கு முல்லா அங்க இருந்து நகர்ந்ததும் வேகமா ஓடி வந்து அந்த சட்டைய தூக்கிட்டு போய்டுச்சு ,அத பார்த்த முல்லா அடடா நல்ல வேலை சட்டையை மட்டும் தூக்கிட்டு போச்சு ,இந்த மாதிரி சகதியில விழாம இருந்திருந்தா இந்த சட்டையை நான் கழட்டி இருக்க மாட்டேன் ,இந்த குரங்கு சட்டையோட சேர்த்து என்னையும் தூக்கிட்டு போயிருக்கும்னு சொல்லிகிட்டே அங்க இருந்து நடந்தாரு

Sudden Rain While Walking Home

தன்னோட வீட்ட நோக்கி நடந்த முல்லா அப்ப திடீர்னு பெரிய காத்து அடிச்சு திடீர் மழை பெஞ்சுச்சு ,இத எதிர்பார்க்காத முல்லா நல்ல வேலை சட்டையை அந்த குரங்கு தூக்கிட்டு போய்டுச்சு இல்லைனா இந்த மழையில சட்டை நனைஞ்சு போயிருக்கும்னு சொல்லிட்டு மேலும் நடக்க ஆரம்பிச்சாரு ,அப்ப அவரோட முதுகுல ஒட்டி இருந்த கொஞ்ச நஞ்ச சகதியும் மழையோட புது தண்ணி பட்டு கொஞ்ச நேரத்துல முல்லா சுத்தமா ஆகிட்டாரு

Arriving Home Clean and Refreshed

எவ்வளவு தவறான விஷயங்கள் நடந்தாலும் சோம்பி போய் அத நினைச்சு பொலம்பாம அடுத்த வேலையில கவனம் செலுத்துன முல்லா சுத்தமான் உடம்போட தன்னோட வீட்டுக்கு வந்து சேர்ந்தாரு ,அவருக்கு கிடைச்ச கஷ்டங்கள் எல்லாத்தையும் விட மழைதண்ணியில குளிச்சது முல்லாவுக்கு உற்சாகத்தை கொடுத்துச்சு