Mulla Goes Upstairs-பரண் மேல ஒளிஞ்சிகிட்ட முல்லா

Mulla Goes Upstairs-பரண் மேல ஒளிஞ்சிகிட்ட முல்லா: முல்லா ஒரு நாளு சந்தையில வேலை பார்த்துகிட்டு இருக்கிறப்ப ஒரு பழைய நண்பர் அவர பாக்க வந்தாரு, அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா நண்பர்களா இருந்தவங்க

Mulla Working at the Market and Meeting His Old Friend

அந்த நண்பர் முல்லாவை ஒரு நாள் சாப்பிட கூப்பிட்டாரு, முல்லாவும் அவருடைய வீட்டுக்குப் போயி விருந்து சாப்பிட்டாரு,

The Old Friend Invites Mulla for a Meal

விருந்து சாப்பிட்ட முல்லா அந்த நண்பர தன்னோட வீட்டுக்கு ரெண்டு நாள் கழிச்சு விருந்துக்கு வரச் சொல்லி கூப்பிட்டாரு,அந்த நண்பரும் சரி வர்றேன்னு சொன்னாரு ,

Mulla at the Friend's House, Enjoying the Feast

விருந்து முடிஞ்சு வீட்டுக்கு வந்த முல்லா தன்னோட மனைவி கிட்ட தான் விருந்துக்கு போயிட்டு வந்த கதைய சொன்னாரு, ரெண்டு நாள் கழிச்சு என்னோட நண்பர் நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வர்றாரு நீ நிறைய கோழிக்கறி சமைச்சு வை அப்படின்னு சொன்னாரு

Mulla Invites the Friend Back and Tells His Wife

ரெண்டு நாள் கழிச்சு முல்லா ஓட  மனைவி வரப்போற விருந்தினர்களுக்காக நிறைய கறி சமைத்து வச்சாங்க, சந்தைக்கு போயிட்டு பசியோட வீடு திரும்பின முல்லா வீட்டுல கறி சமைச்சி இருக்கிறதா பார்த்ததும் ரொம்ப ஆவலோடு சாப்பிட ஆரம்பிச்சாரு

The Wife Prepares the Chicken Curry; Mulla Returns Hungry from Market

கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிச்ச முல்லா கோழிக்கறி ருசியா இருக்கவும் எல்லாத்தையும் அவரே சாப்பிட்டு முடிச்சாரு, அப்பத்தான் அங்க வந்த முல்லா ஓட மனைவி அடடா இன்னைக்கு விருந்துக்கு உங்க நண்பர் வர்றதா சொன்னீங்க அதுக்காக சமைச்சு வச்சேன் எல்லா கோழிக்கறியையும் நீங்களே சாப்பிட்டீங்களே இப்ப அவரு வந்தா என்ன செய்ரதுனு கேட்டாங்க

Mulla Eats All the Chicken Greedily

அப்பத்தான் வீட்டு வாசல்ல யாரோ வர சத்தம் கேட்டுச்சு உடனே முல்லாவுக்கு பதட்டம் ஆயிடுச்சி அடடா நாம விருந்துக்கு கூப்பிட்ட நம்ம நண்பர் வந்துட்டாரு போல இப்ப சாப்பாடு இல்லாம அவருக்கு எப்படி விருந்து வைக்கிறதுன்னு யோசிச்சாரு

Panic as the Friend Arrives—Sound at the Gate

உடனே அவரோட மனைவி கிட்ட என்னோட நண்பர் வந்தா நான் வீட்டில இல்லைன்னு சொல்லி அனுப்பிடுனு சொல்லிட்டு பரணு  மேல ஏறி ஒளிஞ்சிகிட்டாரு

Mulla Hides on the Roof; Wife Greets the Friend

வீட்டுக்குள்ள வந்த அந்த நண்பர் முல்லா எங்கனு கேட்டாரு அதுக்கு முன்னாவோட மனைவி முல்லா வெளியூர் போயிருக்கிறதா சொன்னாங்க ,அப்பத்தான் அந்த நண்பர் சொன்னாரு நான் சந்தையில் இருந்து நடந்து வரேன் எனக்கு முன்னாடி தான் முல்லா வீட்டுக்குள்ள வர்றதை பார்த்தேன் அப்படின்னு சொன்னாரு

The Friend Calls Out the Lie; Mulla Accidentally Responds from Hiding

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்த முல்லா தான் ஒளிஞ்சிகிட்டு இருக்கிறத மறந்து நான் பின் வழியா வெளியூர் போனத நீங்க பாக்கலையா அப்படின்னு சத்தமா சொன்னாரு, முல்லா ஓட சேட்டைகளை தெரிஞ்ச அந்த நண்பர் ஓஹோ இந்த வீட்டில பரண்மேல வழியா கூட வெளியூருக்கு போகலாம் போல அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டாரு

The Friend's Witty Retort and Laughter; Resolution

தன்னோட திருட்டுத்தனம் வெளிப்பட்டதால மேலே இருந்து மெதுவாக இறங்கி வந்த முல்லா தன்னோட நண்பர் கிட்ட நடந்த விஷயத்தை சொன்னாரு ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள்ன்றதால இந்த விஷயத்தை நினைச்சு சிரிச்சாங்க