Mulla Gets a Haircut – முல்லாவும் முடி வெட்டுபவரும் :- முல்லாவுக்கு எப்பவும் நீதி வழி நடக்குறது புடிக்கும் ஆனா மக்களுக்கு தொந்தரவு கொடுக்குறவங்களுக்கு நீதியாவது நேர்மையாவதுனு அவுங்களுக்கு சரியான பதிலடி கொடுக்குறது முல்லாவுக்கு கைவந்த கலை

முல்லா ஒருநாள் தன்னோட தலைமுடி அதிகமா ஆகிட்த உணர்ந்தாரு உடனே இன்னைக்கு சந்தை இல்லை இன்னைக்கு போயி முடி வெட்டலாம்னு முடிவு செஞ்சாரு ,உடனே சந்தைக்கு பக்கத்துல இருக்குற ஒரு முடி வெட்டுற கடைக்கு போனாரு

அங்க ஏற்கனவே நிறய பேரு முடிவெட்டிக்கிட்டு இருந்தாங்க ,உடனே முல்லா வெளியவே கொஞ்ச நேரம் காத்துகிட்டு இருந்தாரு ,அப்பதான் கவனிச்சாறு ,அந்த முடிவெட்டுறவரு அங்க இருந்த யாருக்குமே மரியாதையை கொடுத்து பேசாம அநாகரிகமா நடந்து கிடுறத

வயசுல பெரியவங்கள கூட வாங்க போங்கன்னு கூப்பிடாம ,வா போனு பேசிகிட்டு இருந்தாரு அந்த முடி வெட்டுறவாறு ,இத பார்த்த முல்லாவுக்கு கோபம் வந்துச்சு ,உடனே இந்த ஆளுக்கு சரியான பாடம் கற்பிக்கணும்னு முடிவு செஞ்சாரு

உடனே கொஞ்ச தூரத்துல விளையாடிகிட்டு இருந்த ஒரு சின்ன பையன கூப்பிட்டு அவனுக்கு நிறய மிட்டாய் வாங்கி கொடுத்துட்டு ,அவன் கிட்ட ஏதோ சொல்லி அவனையும் கூட்டிகிட்டு திரும்பவும் அந்த முடிவெட்டுற கடைக்கு வந்தாரு , உள்ள போன முல்லா முதல்ல எனக்கு முடி வெட்டுங்க அப்புறமா இந்த பையனுக்கு முடி வெட்டுங்கனு சொன்னாரு

அந்த முடி வெட்டுறவரு அந்த பையன முல்லாவோட பையன்னு நினைச்சுட்டாரு ,உடனே முல்லாவுக்கு முடி வெட்டி முடிச்சுட்டு ,அந்த பையனுக்கு முடி வெட்ட ஆரம்பிச்சாரு ,அப்பத்தா முல்லா மெதுவா அங்க இருந்து வெளிய போனாரு ,

அப்பதான் அடடா இது என்ன இந்த பெரியவர் காசு கொடுக்காம வெளிய போறாருனு தோணுச்சு ,அப்பதான் அதான் அவரோட மகன் இங்க இருக்காரே ,அவரே வந்து காசு கொடுத்துட்டு மகன கூட்டிட்டு போவாருனு ஒரு நம்பிக்கையும் இருந்துச்சு ,உடனே தொடர்ந்து அந்த பையனுக்கு முடி வெட்டி முடிச்சாரு

முடிச்சிட்டு கடைக்கு வெளிய வந்து பார்த்தா முல்லா அங்க எங்கேயுமே இல்ல ,அப்பதான் அந்த முடி வெட்டுறவருக்கு சந்தேகம் வந்துச்சு ,தம்பி உங்க அப்ப எப்ப வந்து எனக்கு காசு கொடுத்துட்டு உன்ன கூட்டிகிட்டு போவாருனு கேட்டாரு
அதுக்கு அந்த பையன் சொன்னான் அது எங்க அப்பவே இல்ல ,எனக்கு நிறய மிட்டாயும் ஒரு கடிதமும் கொடுத்து இங்க கூட்டிட்டு வந்தாரு ,எனக்கு முடி வெட்டி முடிச்சிட்டு அவர தேடும்போது இத உங்க கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்தாருன்னு ஒரு கடிதத்தை முடி வெட்டுறவருக்கு கொடுத்தான் அந்த பையன்

அத வாங்கி படிச்சாரு அந்த முடி வெட்டுறவாறு ,நீங்க இந்த இருக்குற எல்லாத்தையும் உங்க வீட்டு வேலைகாரங்க மாதிரி பேசுறீங்களே நீங்க என்ன அவ்வளவு பெரிய பணக்காரரா இல்ல பெரிய அறிஞரானு எனக்கு தெரியல ,அதனால எனக்கு முடி வெட்டுனத இலவசமா நினைச்சுக்கோங்கன்னு எழுதி இருந்தாரு முல்லா

அப்பதான் அவருக்கு புரிஞ்சது ,எல்லாரையும் தான் தவறா பேசுறத பாத்துட்டுதான் ,இந்த முல்லா திட்டம் போட்டு நம்மள ஏமாத்தி இருக்காருன்னு புரிஞ்சிக்கிட்டாரு