Mulla Eating Eggs – முட்டையும் முல்லாவும் :- முல்லா எப்பவும் தன்னோட வீட்டுல உக்காந்துதான் சாப்புடுவாரு ,ஒருநாள் சாயந்தரம் மோடம் போட்டுக்கிட்டு நல்லா காத்து அடிச்சுச்சு

உடனே அவருக்கு வீட்டு வாசல்ல உக்காந்து இன்னைக்கு சாப்பிட்டா என்னனு தோணுச்சு ,உடனே வீட்டுல சாப்பிடுறதுக்கு என்ன இருக்குனு பார்த்தாரு ,அன்னைக்கு வீட்டுல சாப்பிடறதுக்கு எதுவுமே இல்ல உடனே ரெண்டு முட்டையை எடுத்து வேக வச்சாரு ,

அத எடுத்துக்கிட்டு வெளிய வந்த முல்லா அங்க இருந்த ஒரு மர சேர்ல உக்காந்து முட்டைய சாப்பிட ஆரம்பிச்சாரு ,நல்ல காத்து அடிச்சதால ,முல்லா மெய்மறந்து மெதுவா சாப்பிட்டு கிட்டு இருந்தாரு

அப்ப அங்க வந்த முல்லாவோட நண்பருக்கு ஒரே ஆச்சர்யம் ,எப்பவும் வீட்டுக்குள்ளயே சாப்பிடுறவரு முல்லா ,இன்னைக்கு எதுக்கு வெளிய உக்காந்து சாப்பிடுறாருனு ஒரு சந்தேகம் வந்துச்சு

உடனே என்ன முல்லா சேர் மேல உக்காந்து முட்ட சாப்புடுறீங்கன்னு கேட்டாரு ,அதுக்கு முல்லா சொன்னாரு முட்ட மேல உக்காந்து சேர சாப்பிட முடியாதுல அதுனால தான்னு சொன்னாரு

இந்த ஆளு என்ன செஞ்சா நமக்கு என்ன ,இவரு கிட்ட போயி விசாரிச்சு ,இப்ப இந்த அவமானம் நமக்கு தேவயானு நினைச்சுட்டு அங்க இருந்து வேகமா நடந்து போய்ட்டாரு அந்த நண்பர்
