Mulla and the Tall Tree – மரத்தில் ஏறிய முல்லா

Mulla and the Tall Tree – மரத்தில் ஏறிய முல்லா :- முல்லாவ ஏமாத்த நிறய பேர் முயற்சி செஞ்சு இருக்காங்க ,ஆனா ஒருத்தர் கூட முல்லாவ ஏமாத்தி இருக்காங்களான்னு கேட்டா இல்லைனு தான் சொல்லணும்

mulla and the funny story begins image

ஏன்னா முல்லா கிட்ட யாரவது பேச வந்தாலே ,அவுங்களோட நிலைமை என்ன ,அவுங்களோட உடை என்ன சொல்லுது ,முகம் என்ன சொல்லுதுனு புரிஞ்சிகிட்டு அதுக்கு ஏத்தமாதிரி பதில் சொல்லுவாரு முல்லா ,அதனால் யாருமே முல்லாவ ஏமாத்த முடியாது

merchand slippers broken image

ஒருநாள் ஒரு வியாபாரி காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தாரு அப்ப அவரோட செருப்பு அறுந்து போச்சு ,அந்த செருப்ப போட்டுக்கிட்டு நடக்கவே முடியல அதனால அத அங்கேயே போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சாரு அந்த வியாபாரி ,அப்பத்தான் ஒரு கல் பட்டு அவரு பெரு விரல்ல ரெத்தம் வர ஆரம்பிச்சுச்சு உடனே அங்க இருந்த ஒரு கல்லுல உக்காந்து எப்படி மீதி தூரத்தை கடக்க போறோம்னு யோசிச்சாறு

merchant let injured image

செருப்பு இல்லாம தன்னல ஒரு அடி கூட நடக்க முடியாது ,இந்த காட்டுல புது செருப்பும் வாங்க முடியாது ,இங்க வர்ற யருகிட்டயாவது செருப்ப வாங்கலாம்னு அவுங்களுக்கும் செருப்பு கண்டிப்பா தேவைப்படும் ,அதனால இந்த பக்கம் வர்ற பயனீங்க யாரையாவது ஏமாத்தி அவுங்க செருப்ப திருடனும்னு நினைச்சாரு அந்த வியாபாரி

merchand got idea

அப்பத்தான் அந்த பாதையில முல்லா வர்றத பார்த்தாரு அந்த வியாபாரி ,அடடா முல்லா உங்கள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நல்லா இருக்கீங்களானு கேட்டாரு ,அதுக்கு முல்லாவும் சிரிச்சிகிட்டே பதில் சொன்னாரு ,அப்பதான் அந்த வியாபாரி சொன்னாரு முல்லா இங்க பாருங்க இந்த விசித்திரமான மரத்தை இது எவ்வளவு உயரமா இருக்குனு பாருங்க

merchand invites mulla

இது எதோ மந்திர மரம்னு நினைக்குறேன் இதுல ஏறுனா ஒரு வேலை சொர்க்கத்துக்கு கூட போகலாம்னு சொன்னாரு ,இத கேட்ட முல்லா அப்ப நீங்க ஏறி சொர்கம் வருதான்னு பார்த்தீங்களானு கேட்டாரு ,

merchand tell about the tall tree image

அதுக்கு அந்த வியாபாரி சொன்னாரு எனக்கு அந்த அளவு பலம் இல்லைனு சொல்லிட்டு நீங்கதான் ரொம்ப பலசாலியா இருக்கீங்க நீங்க ஏறுங்க முல்லானு உற்சாக படுத்துனாரு

MErchand encourage mulla to climbs the tall tree image

முல்லா எப்படியும் இந்த உயரமான மரத்துல ஏறுவாரு அதுக்கு எப்படியும் செருப்பை கழட்டி வச்சிட்டு தான் ஆகணும் அப்ப அந்த செருப்பை தான் போட்டுக்கிட்டு அங்க இருந்து ஓடி போய்டலாம்னு நினைச்சாரு ,ஆனா முல்லா தன்னோட செருப்பை கழட்டுனாரு ஆனா அத கீழ போடாம தன்னோட இடுப்புல இருந்த பெல்ட்டுல கட்டிக்கிட்டு அந்த மரத்துல ஏற ஆரம்பிச்சாரு

Mulla Tie his slippers with rope

அத பார்த்த அந்த வியாபாரிக்கு ஒண்ணுமே புரியல ,உடனே முல்லாவ தடுத்து எதுக்கு முல்லா செருப்ப இடுப்புல கட்டிக்கிட்டு மரத்துல ஏறுரீங்கனு கேட்டாரு ,

Mulla Climbs the Tall Tree

அதுக்கு முல்லா சிரிச்சிகிட்டே சொன்னாரு ,இது நீங்க சொன்ன மாதிரி சொர்கத்துக்கு என்ன கூட்டிகிட்டு போச்சுன்னா நிறய தூரம் நடக்கணும் அங்க போயி செருப்பு இல்லாம உங்கள மாதிரி கஷ்ட பட கூட்டத்துல அதனால தாணு சொன்னாரு முல்லா

Mulla asked the merchant what do u want image

உங்கள மாதிரி கஷ்டப்பட கூடாதுனு முல்லா சொன்னதும் தன்னோட திட்டம் எல்லாம் முல்லாவுக்கு தெரிச்சிடுச்சுனு புரிஞ்சிக்கிட்டாரு அந்த வியாபாரி ,தன்னோட நோக்கம் என்னனு உங்களுக்கு எப்படி முல்லா தெரிஞ்சதுனு கேட்டாரு

Mulla Said the whole story image

அதுக்கு முல்லா சொன்னாரு கொஞ்ச தூரத்துக்கு முன்னாடி ஒரு புது செருப்பு அறுந்து கிடக்கிறத பார்த்தேன் ,அடுத்தது உங்க கால்ல கல் தடுக்கி ரெத்தம் வர்றதையும் பாத்தேன் , தேவையில்லாம சுவர்க்கம் நரகம்னு நீங்க கதை விடுறதையும் பார்த்தேன் இதுல இருந்தே தெரிஞ்சி கிட்டேன் உங்களுக்கு என்ன தேவைன்னு சொன்னாரு

Mulla Said go on trusted Path image

இத கேட்ட அந்த வியாபாரி வெட்கி தலை குனிஞ்சாறு ,அப்பதான் முல்லா சொன்னாரு உண்மையின் பக்கம் இருந்து உதவி கேளுங்க உங்களுக்கு எல்லா உதவியும் கிடைக்குனு சொல்லிட்டு தன்னோட இடுப்புல கட்டி இருந்த செருப்பை எடுத்து அந்த வியாபாரிக்கு கொடுத்துட்டு நடக்க ஆரம்பிச்சாரு முல்லா

Mulla Walk Away Image