Mulla and the Porter – முல்லாவும் சுமை தூக்குபவரும்

Mulla and the Porter – முல்லாவும் சுமை தூக்குபவரும் :- முல்லாவுக்கு அடுத்தவங்கள ஏமாத்தி பணம் சம்பாதிக்கிறவங்கள பார்த்தாலே பிடிக்காது.அவுங்கள பார்த்தாலே முல்லாவுக்கு கோபம் வரும் அவுங்கள ஏமாத்தி அவுங்கள முட்டாளாக்குறது முல்லாவுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்

Mulla's disdain for cheaters

ஒருநாள் முல்லா தன்னோட சந்தையில இருக்குற கடையில உக்காந்து வியாபாரம் பார்த்துகிட்டு இருந்தாரு ,அப்ப பக்கத்து கடைக்காரர் ஒரு மாட்டி வண்டி வச்சு சுமை தூக்குறவர கூப்பிட்டு ஐயா இந்த மூட்டைகளை எடுத்து அடுக்கி வைக்கணும் எவ்வளவு சம்பளம் வேணும்னு கேட்டாரு

Mulla at his shop, shopkeeper calls porter

அதுக்கு அந்த சுமை தூக்குறவரு சொன்னாரு எனக்கு பத்து ரூபா வேணும்னு சொன்னாரு ,அத கேட்ட அந்த பக்கத்து கடைக்காரர் அதிர்ச்சி ஆகிட்டாரு ,ஐயா நாங்க இந்த வேலைக்கு எப்பவும் 2 ருபாய் தான் கொடுப்போம் ,எதுக்கு இப்படி விலை அதிகமா சொல்லுறீங்கன்னு கேட்டாரு

Porter demands 10 rupees, shopkeeper shocked

அதுக்கு அண்ட் சுமை தூக்குறவரு சொன்னாரு நாங்க சுமை தூக்குறவங்க இல்லைனா இந்த சந்தையில எதுவுமே நடக்காது ,மரியாதையா நான் கேட்ட ரூபாய கொடுன்னு சொன்னாரு ,இத கேட்ட கடை காரர் நீங்க போங்க நான் வெளியூர் சுமை தூக்குறவங்க வச்சு வேலை வாங்கிக்குறேனு சொன்னாரு

Porter justifies, shopkeeper threatens outsiders

அதுக்கு அந்த சுமை தூக்குறவரு சொன்னாரு அது எப்படி நாங்க இருக்கிறப்ப அடுத்த ஊர் காரங்களை இந்த சந்தையில வேல செய்ய விடுவோம் ,அப்படி யாராவது வந்தாங்கனு வை அவுங்களையும் உன்னையும் அடிச்சி துரத்திடுவோம்னு திமிரோட சொன்னாரு

Porter threatens violence arrogantly

இத எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருந்த முல்லாவுக்கு அடடா எவ்வளவு திமிரா இந்த சுமை தூக்குறவரு நடந்துக்கிறாரு ,இவருக்கு சரியான பாடம் கத்து கொடுக்கணும்னு நினைச்சாரு ,உடனே முல்லாவுக்கு ஒரு நல்ல ஐடியா வந்துச்சு

Mulla decides to teach a lesson, gets idea

தன்னோட கடையில இருந்த எல்லா பொருளையும் வெளியில எடுத்து வச்சு ஒரு மூட்டையா கட்டுன்னாரு ,அந்த சுமை தூக்குறவரை கூப்பிட்டு ஐயா இந்த முட்டையையும் என்னையும் என்னோட வீடு வரைக்கு வண்டியில கூட்டிட்டு போய் விடணும்னு அதுக்கு எவ்வளவு ரூபாய் ஆகும்னு கேட்டாரு

Mulla bundles goods, calls porter and asks price

பேராசை பிடிச்ச அந்த சுமைதூக்குறவரு ,ஐயா இந்த மூட்டை எல்லாம் பெருசா இருக்கு இது எல்லாத்துக்கும் 30 ரூபா கொடுங்க ,உங்கள நான் ஓசியா கொட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாரு ,உடனே முல்லா ஓஹ் அப்படியா விலை எதாவது குறைப்பீங்களானு கேட்டாரு

Porter greedily quotes 30 rupees, Mulla bargains

அதுக்கு அந்த சுமை தூக்குறவரு சொன்னாரு நான் சொன்னது சொன்னதுதான் ,எந்த காரணத்துக்காகவும் பேச்சை மாத்த மாட்டேன்னு சொன்னாரு ,உடனே முல்லா தன்னோட முட்டைகள் எல்லாத்தையும் தன்னோட கழுதை முதுகுல ஏத்த ஆரம்பிச்சாரு

Porter refuses to budge, Mulla loads donkey

இத பார்த்த சுமை தூக்குறவரு என்ன இந்த கிழவன் நம்ம கிட்ட பேரம் பேசிட்டு ,மூட்ட எல்லாத்தையும் அவனோட கழுதையிலேயே ஏத்துறாரேன்னு பார்த்தாரு ,அப்பதான் அந்த கட்சிய பார்த்துகிட்டு இருந்த பக்கத்து கடைக்காரர்கள் எல்லாரும் ,இன்னைக்கு இந்த திமிர் பிடிச்ச பயலுக்கு முல்லா சரியான பாடம் கத்து கொடுக்க போறாருனு நினைச்சு ஆவலோடு என்ன நடக்க போகுதுனு பார்த்தாங்க

Porter confused, onlookers anticipate lesson

எல்லா மூட்டையையும் கழுதை மேல ஏத்துன முல்லா ,அந்த சுமை தூக்குறவர் வண்டியில ஏரி உக்காந்துக்கிட்டாரு ,உம் போகலாம்னு சொன்னாரு ,அந்த சுமை தூக்குறவரு ஒன்னும் புரியாம முழிச்சாரு ,அப்பதான் முல்லா சொன்னாரு ,நீங்க பொருள்களுக்கு மட்டும் தான் 30 ரூபா கேட்டீங்க இப்ப அது எல்லாம் என்னோட கழுதையில வருது ,எனக்கு ஓசினு சொன்னீங்க அதனால் என்ன காசு வாங்காம என்னோட வீட்டுல கொண்டு போய் விடுங்கனு சொன்னாரு

Mulla loads done, sits on cart, tricks porter

இத கேட்ட அந்த சுமை தூக்குறவரு அடடா அவசரப்பட்டு தேவையில்லாம பேசி இப்படி மாட்டிக்கிட்டமேன்னு அசடு வழிஞ்சாரு ,உடனே முல்லா கிட்ட ஐயா என்ன மன்னிச்சிடுங்கனு சொன்னாரு ,அப்பதான் முல்லா சொன்னாரு உனக்கு தொழில் எங்களை மாதிரி வியாபாரிங்க கொடுக்குற வேலைய செஞ்சு பணம் சம்பாதிக்கிறது ,

Porter realizes mistake, begs forgiveness, Mulla questions

நானும் காலையில இருந்து பார்க்குறேனு எல்லா வியாபாரிங்க கிட்டயும் அடாவடியா பேசி எல்லாரு கூடவும் சண்டை போடுற ,ஏன் இப்படி செய்யுறனு கேட்டாரு ,அதுக்கு நான் ரொம்ப தவறு செஞ்சுட்டேன் என்னால இந்த வியாபாரிகளுக்கு இனிமே எதுவும் தொந்தரவு வராதுன்னு சொல்லிட்டு அங்க இருந்து போய்ட்டாரு அந்த சுமை தூக்குறவரு

Mulla lectures, porter promises change and leaves

1 thought on “Mulla and the Porter – முல்லாவும் சுமை தூக்குபவரும்”

Comments are closed.