Mulla and the Philosopher’s Questions – முல்லாவும் 100 கேள்விகளும்

Mulla and the Philosopher’s Questions – முல்லாவும் 100 கேள்விகளும் :- முல்லாவோட புகழ் உலகம் பூராவும் பரவி இருந்துச்சு ,அதனால அடுத்த நாட்டு மக்களுக்கு கூட முல்லாவோட திறமை தெரிஞ்சு இருந்துச்சு

Mulla's Fame Spreads Worldwide

ஒவ்வொரு ஊருலயும் இருக்குற புகழ் பெற்ற அறிஞர்கள் எல்லாரும் முல்லா கிட்ட போட்டி போட்டு எப்படியாவது ஜெயிச்சிட்டா இந்த உலகத்துல அவரை விட பெரிய பேரும் புகழும் நமக்கு கிடைக்கும்னு எல்லாரும் நினைச்சாங்க,அதுக்காகவே நிறய பேரு முல்லா இருக்குற ஊருக்கு வந்து அவரு கிட்ட போட்டி போட்டு இருக்காங்க ஆனா ஒவ்வொருத்தரையும் முல்லா முட்டாளாக்கி தான் திருப்பி அனுப்புச்சி இருக்காரு

The Neighboring Scholar Arrives and Challenges Scholars Compete and Lose to Mulla

ஒரு தடவ அந்த ஊருக்கு பக்கத்து தேசத்துல இருந்து ஒரு அறிஞர் வந்தாரு , சந்தைக்கு வந்த அவரு ஒரு பெரிய ஆலமரத்து அடியில இருந்த திண்ணையில உக்காந்து கிட்டு எல்லாரு கிட்டயும் ,நான் முல்லாவ விட பெரிய புத்திசாலி என் கிட்ட போட்டி போட அந்த முல்லாவ கூட்டிட்டு வாங்கனு சொன்னாரு

Market Buzz and Crowd Gathers

இத கேட்ட அந்த சந்தையில இருக்காவங்க எல்லாம் அடடா முல்லா கிட்ட தோக்க இன்னொரு அறிஞர் வந்திருக்காருனு பேச ஆரம்பிச்சாங்க ,அந்த காட்சியை பார்க்க ஒவொருத்தரா வந்து அந்த திண்ணைக்கு முன்னாடி உக்கார ஆரம்பிச்சாங்க ,கொஞ்ச நேரத்துல அங்க மிக பெரிய கூட்டம் கூடிடுச்சு

Mulla Hears the News While Working

அப்பதான் முல்லாவுக்கு சேதி தெரிஞ்சுச்சு ,இத பத்தி எல்லாம் யோசிக்காம வியாபாரம் செஞ்சுகிட்டு இருந்த முல்லா ,அடடா இது என்ன நம்ம வேலைய கெடுக்குறதுக்குனே இப்படி நிறய பேரு வந்து தொந்தரவு செய்யுறாங்களேன்னு நினைச்சாரு ,அப்பத்தா முல்லாவோட நண்பர் அங்க வந்து முல்லா அங்க ஒரு பெரிய கூட்டமே உங்களுக்காக காத்துகிட்டு இருக்கு நீங்க இங்க என்ன செய்யுறீங்க வாங்க போகலாம்னு சொன்னாரு

Mulla Closes Shop and Heads to the Challenge

உடனே முல்லா தன்னோட கடைய எடுத்து வச்சிட்டு அந்த அறிஞர் இருந்த இடத்துக்கு போனாரு ,அங்க போனதும் அங்க இருந்த கூட்டத்தை பார்த்ததும் உற்சாகம் ஆகிட்டாரு முல்லா ,நேரா அந்த அறிஞர் கிட்ட போயி உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டாரு

 Mulla Arrives and Greets the Scholar

உடனே அந்த அறிஞர் உங்க கூட போட்டி போட்டு யாருமே ஜெயிக்க முடியாதுனு சொன்னாங்க ,எனக்கு அதுல நம்பிக்கை இல்ல நான் கேக்குற கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லிட்டா நீங்கதான் இந்த உலகத்துலயே பெரிய புத்திசாலின்னு ஒத்துக்கிடறேனு சொன்னாரு

The Scholar Proposes the Competition

இத கேட்ட முல்லா நான் போட்டிக்கு தயார்னு சொன்னாரு ,உடனே அந்த அறிஞர் கேட்டாரு உங்க கிட்ட 100 சுலபமான கேள்விகள் கேட்கட்டுமா ,இல்ல ஒரே ஒரு கடினமான கேள்வி கேட்கட்டுமா ,எது உங்க விருப்பம்னு கேட்டாரு ,அதுக்கு அந்த முல்லா சொன்னாரு 100 கேள்விகளும் சுலபம்னு நீங்களே சொல்லறீங்க அதனால எனக்கு அது வேணாம் நீங்க அந்த கஷ்டமான கேள்விய கேளுங்க நான் பதில் சொல்லுறேன்னு சொன்னாரு

Mulla Agrees and Chooses the Hard Question

அப்பத்தான் அந்த அறிஞர் ஒரு கேள்விய கேட்டாரு ,கோழியில இருந்து முட்ட வந்துச்சா இல்ல முட்டையில இருந்து கோழி வந்துச்சான்னு கேட்டாரு ,இத கேட்டதும் அங்க இருந்த கூட்டத்துல ஒரே சலசலப்பு இப்படி விதண்டா வாத கேள்விய இந்த ஆளு கேட்டுட்டாரே இதுக்கு முல்லா என்ன பதில் சொல்ல போறாருனு எல்லாரும் ரொம்ப ஆவல் ஆகிட்டாங்க

The Scholar Asks the Chicken-Egg Question

அப்பதான் முல்லா சொன்னாரு கோழியில இருந்துதான் முட்டை வந்துச்சுனு சொன்னாரு ,உடனே அந்த அறிஞர் அப்பா முட்ட எப்படி வந்துச்சுனு கேட்டாரு ,அதுக்கு முல்லா சிரிச்சிகிட்டே சொன்னாரு ,என்கிட்டே கேக்குறதா சொன்னது ஒரே ஒரு கஷ்டமான கேள்வி ,அந்த கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன்னு சொன்னாரு ,உடனே கூட்டத்துல ஒரே கை தட்டல்

Mulla Delivers the Final Pun and Crowd Applauds

இத கேட்ட அந்த அறிஞருக்கு அடுத்து என்ன பேசுறதுனே தெரியல ,விதண்டா வாதமா ,பதிலே கொடுக்க முடியாத கேள்வி கேட்டா இந்த ஆளு எதாவது பதில் சொல்லுவாரு இவர மடக்கிடலாம்னு நினைச்சா , இந்த ஆளு கேள்வி கேட்ட தன்னையே மடக்கிட்டாரேன்னு சொல்லிட்டு ,அங்க இருந்த எல்லாருகிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டு அங்க இருந்து மெதுவா நடந்து போனாரு அவரு

Scholar Apologizes and Leaves; Epilogue Explanation

அறிவியல் விளக்கம்

தற்போதைய அறிவியல் கோட்பாடுகளின் படி முட்டை தான் முதலில் வந்திருக்க வேண்டும் , ஒரு கோழி முட்டையில் இருந்தே வரும் ,ஆனால் அந்த முட்ட கோழியால் இடப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை , பரிணாம வளர்ச்சியில் கோழிக்கு முந்தய பறவையின் முட்டையாக கூட அது இருக்கலாம்