Mulla and the Fish – முல்லாவின் பேசும் மீன்

Mulla and the Fish – முல்லாவின் பேசும் மீன் :- முல்லா ஒருநாள் பக்கத்து ஊர் திருவிழாவுக்கு போனாரு , நிறைய புது புது கடைகளையும் ராட்டினங்களையும் பார்த்து வியந்து சந்தோஷப்பட்டாரு முல்லா

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு வண்ண மீன் கடைய பார்த்தாரு முல்லா ,அந்த குட்டி குட்டி மீன்களை பார்த்ததும் முல்லாவுக்கு ரொம்ப புடிச்சி போச்சு உடனே அந்த மீன்கள் கொஞ்சம் வீட்டுக்கு வாங்கிட்டு போகணும்னு நினைச்சாரு

அதனால ஒரு கண்ணாடி குடுவை வாங்கி அதுல நிறய தங்க வண்ண மீன்கள் வாங்கிட்டு வீட்டுக்கு போனாரு , தினமும் மீன்களை பார்த்து ரசிச்ச முல்லாவுக்கு தன்னோட மீன்கள் மேல ரொம்ப பாசம் வச்சிட்டாரு ,எப்ப பார்த்தாலும் மீன் பத்தி பேசுறது ,மீனுக்கு சாப்பாடு போடுறது மீன் தொட்டிய கழுவி பராமரிக்குறதுனு சந்தோசமா இருந்தாரு

அப்ப ஒருநாள் சந்தையில இருந்த டீ கடைக்கு போனாரு முல்லா ,அங்க ஏற்கனவே அவரோட நண்பர் டீ குடிச்சிகிட்டு இருந்தாரு ,அவரு முல்லாவோட புகழாலும் அறிவாலும் எல்லாருக்கும் தெரிஞ்சவரா இருக்குறதால அவர் எப்பவும் முல்லா மேல பொறாமையோட இருந்தாரு ,டீ வாங்குன முல்லா அவரு கிட்ட போய் உக்காந்தாரு

அந்த போராம பிடிச்ச நண்பர் பேச ஆரம்பிச்சாரு ,என்ன முல்லா புதுசா மீன் எல்லாம் வளக்குறீங்க போலன்னு கேட்டாரு ,அதுக்கு முல்லா ஆமாம்னு சொன்னாரு ,அதுக்கு அந்த நண்பர் கேட்டாரு அப்ப எனக்கு ஒரு கிலோ மீன் கொடுங்க எனக்கு மீன் சாப்பிடணும் போல இருக்குனு சொன்னாரு

நண்பர் தன்னை கிண்டல் செய்யுறாருனு புரிஞ்சிகிட்ட முல்லா கோபப்படாம நான் வளர்க்கிறது அழகுக்காக வளர்க்கிற வண்ணமீன்கள் அது சாப்பிடுற மீன் கிடையாதுன்னு பொறுமையா சொன்னாரு ,ஓஹ் முட்டாள் மீன்களா ,இந்த உலகத்துலயே ரொம்ப முட்டாள் தனம் கொண்டது மீன் தாணு சொன்னாரு

பொறுமையா இருந்த முல்லாவுக்கு அப்பத்தான் கோபம் லேசா வந்துச்சு இங்க பாரு என்னோட மீன்களை பத்தி கேவலமா பேசாத அதுங்க பாவம்னு சொன்னாரு ,அடுத்ததா ஏன் முல்லா உங்க முட்டாள் மீன்கள் பேசுமா ,இல்ல மத்த மிருகங்கள் மாதிரி சத்தாமாவது கொடுக்குமான்னு கேட்டு சிரிச்சாரு

அப்ப கோவத்தோட உச்சத்துக்கு போன முல்லா அந்த ஆள் தலைய புடிச்சி பக்கத்துல இருந்த அண்டாவுல இருந்த தண்ணிக்குள்ள முக்குனாரு ,இத கொஞ்சம்கூட எதிர்பார்க்காத அந்த நண்பர் பயந்து போனாரு ,அப்ப முல்லா சொன்னாரு என்ன நீயும் என்னோட மீன்கள் மாதிரி முட்டாளா மாறிட்டியா என்ன ,

தண்ணிக்குள்ள போனதும் பேசவே இல்ல ,குறைந்த பட்சம் மத்த மிருகங்கள் மாதிரி சத்தம் கூட குடுக்கலைனு சொல்லி சிரிச்சாரு ,தேவ இல்லாம வாய கொடுத்து வெட்டியா அடிவாங்கிட்டமேன்னு சொல்லிட்டு அங்க இருந்து போய்ட்டாரு