Mulla and the Case of the Cow – முல்லா கழுத்தையும் பசு மாடும் :- முல்லா ஒரு கழுதையை வளர்த்துக்கிட்டு வந்தாருனு நம்ம எல்லாருக்கும் தெரியும்

ஒருநாள் அந்த கழுத ரொம்ப முரண்டு பிடிச்சிச்சு ,எதுக்கு இப்படி சேட்டை செய்யுதுனு யோசிச்ச முல்லா ,அதுக்கு ரொம்ப பசிக்குது போலன்னு கொஞ்சம் புள் எடுத்து ஊட்டி விட்டாரு ,அத தின்னுட்டு இன்னும் வேணும்னு கேக்குற மாதிரி கத்துச்சு

சகிக்க முடியாத கழுதையோட சத்தத்த கேட்ட முல்லா அட செய் உனக்கு இன்னும் புள் வேணும்னா காட்டுல போயி நீயே தின்னுக்கொன்னு சொல்லி அடிச்சி தொரத்தி விட்டுட்டாரு ,கழுதை போனதுக்கு அப்புறம் முல்லாவுக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு ,

சேட்டை செய்யுற கழுதை யாரையாவது தள்ளி விட்டுடுச்சுனா எல்லாரும் தன்கூட சண்டைக்கு வருவாங்க ,இப்படி தனியா கழுதையை விரட்டி விட்டுட்டமேன்னு யோசிச்ச முல்லா ஒரு கயிற எடுத்துக்கிட்டு கழுதையோர் காலடி தடத்த பார்த்துகிட்டே போனாரு

அப்பத்தான் அந்த கழுதை ஒரு புள் மேட்டுல மேஞ்சுக்கிட்டு இருக்குறத பார்த்தாரு ,அப்ப அங்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்குற எருமை மாடு ஒன்னு கழுதையை முட்டி தள்ளி விட்டுடுச்சு ,இத பார்த்த முல்லா வேகமா ஓடி போயி பார்த்தாரு கழுதைக்கு சின்னதா தான் அடி பட்டு இருந்துச்சு

அப்ப அவருக்கு கோபம் வந்துச்சு ,அந்த எருமையை வளர்க்குறவங்க கிட்ட போயி ஞாயம் கேக்கணும்னு நினைச்சாரு ,ஆனா இந்த கட்சிய பார்த்தே ஒரே சாட்சி தான் மட்டும்தான் தன்னோட சொல் பஞ்சாயத்துல எடுபடாதுனு அவருக்கு தெரிஞ்சது ,

அதோட ,அந்த எரும மேய்கிறவரு ரொம்ப கஞ்சன் வேற அவன எப்படி சமாளிச்சு ,எப்படி இதுக்கு நஷ்ட ஈடு வாங்குறதுனு யோசிச்சிகிட்டே கழுதையா கட்டி இழுத்துகிட்டு பஞ்சத்து தலைவர் கிட்ட போனாரு,அப்பதான் முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு அந்த எருமை மாடு வச்சிருக்குறவரு எந்த அளவுக்கு கஞ்சனோ அத விட பெரிய பேராசைக்காரன் ,அவனோட பேராசைய தூண்டி விட்டம்னாதான் நமக்கு ஞாயம் கிடைக்கும்னு தோணுச்சு அவருக்கு ,

அவரு கிட்ட என்னோட கழுதை பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்குற எருமையை தள்ளி விட்டுடுச்சுனு சொன்னாரு ,இத கேட்ட பஞ்சாயத்து தலைவர் எருமையை வளர்க்குறவர கூட்டிகிட்டு வந்தாரு,கோபத்தோடு வந்த அவரு அது எப்படி என்னோட எருமையை உங்க கழுதை முட்டலாம்னு சண்டை போட ஆரம்பிச்சாரு

அத பார்த்த பஞ்சாயத்து தலைவர் இது மிக பெரிய தவறு முல்லா ,இதுக்கு நஷ்ட ஈடா 10 தங்க நாணயம் இவருக்கு நீங்க கொடுக்கணும்னு சொன்னாரு ,அப்பதான் முல்லா சொன்னாரு நான் கொஞ்சம் தூக்க கலகத்துல தப்பா சொல்லிட்டேன்

கழுதை எருமையை முட்டல , எருமைதான் என்னோட கழுதைய முட்டி தள்ளி விட்டுடுச்சு இங்க பாருங்க என் கழுதையோட வயித்துல எருமையோட கொம்பு தடம் பதிஞ்சிருக்குதுனு சொன்னாரு ,இத கேட்ட எருமை வளர்க்குறவரு இதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேனு சொன்னாரு

அப்பத்தான் முல்லா பேச ஆரம்பிச்சாரு ,என்னது மன்னிப்பா நீங்கதான் கழுத்தை முட்டுனா 10 தங்க காசு அபாரதம்னு ,இப்ப அந்த அபராதத்தை நீங்க எனக்கு கொடுங்கன்னு கேட்டாரு ,வேற வழி இல்லாம அந்த எருமையை வளர்க்குறவரு முல்லாவுக்கு அபராதம் கொடுத்தாரு
