Money Vs Family Story in Tamil :- சிங்காரம் ஒரு மிக பெரிய உழைப்பாளி அவர் எப்பவும் தன்னோட குடும்பத்துக்காக உழைச்சு கிட்டே இருப்பாரு

தன்னோட மனைவி , மகன் ,மகளுக்கு நல்ல வீடு நல்ல வாழ்கை அமைக்கணும்னு அவரு தினமும் வேலைக்கு போவாரு
சில காலங்களுக்கு அப்புறமா அவர் பணக்காரனா ஆனாரு இருந்தாலும் வேலைக்கு போறத நிறுத்தல

சின்ன பிள்ளைகளா இருந்த தன்னோட மகன் மகள் கூட நேரத்த செலவு செய்யாத அவருக்கு ஒருநாள் அவரோட முதலாளி தன்னோட குட்டி குழந்தையை கூட்டிகிட்டு வந்தாரு
அந்த குழந்தையோட சிரிப்பு அழக பாத்த சிங்காரம் தன்னோட குழந்தைகள் கூட நேரத்த செலவிடாம போனது எவ்வளவு தவறுன்னு உணர்ந்தாரு
அப்படி யோசிச்சுகிட்டே வீட்டுக்கு போன அவரு தன்னோட குழந்தைகள் இப்ப பெரிய ஆளுகளா மாறுனதா பாத்தாரு

இனி அவனுங்க குழந்தைகள் இல்லை, பணம் சம்பாதிக்கிற மும்முரத்துல தன்னோட சின்ன சின்ன சந்தோசத்த விட்டுட்டமேன்னு வருத்தப்பட்டாரு
அப்பத்தான் அவருக்கு தோணுச்சு பணம் எல்லாத்தையும் கொடுக்காதுன்னு