ஒரு அம்மா நாய்க்கு 6 நாய் குட்டிங்க பிறந்துச்சு

அவுங்க வீடு ஒரு கிணத்துக்கு பக்கத்துல இருந்ததால யாரும் அந்த கிணத்து பக்கம் போக கூடாதுனு அம்மா நாய் சொல்லுச்சு
எல்லா நாய்குட்டியும் அம்மா சொல் படி சமத்தா இருந்தாங்க
ஒரு நாள் ஒரு சேட்டக்கார நாய்க்குட்டி மட்டும் அப்படி அந்த கிணத்துல என்னதான் இருக்குன்னு பாக்க அச்சப்பட்டுச்சு

மெதுவா கிணத்து மேல ஏறி எட்டி பாத்துச்சு
அந்த குட்டி நாயோட பிரதி பலிப்பு அந்த தண்ணியில தெரிஞ்சது

இத பத்த குட்டி நாய்க்கு ஒரே குழப்பம் உள்ள இன்னொரு நாய் இருக்குன்னு நினைச்சு கொலைச்சது
உள்ள இருந்து அந்த நாயும் கொலைக்குறத பாத்த அந்த குட்டி நாயி தண்ணில குதிச்சது

உள்ள இருந்தது தன்னோட பிரதிபலிப்பு தாணு புரிஞ்சுகிட்டு அந்த குட்டி நாய் காப்பாத்த ஆள் இல்லாம கோலச்சுகிட்டே இருந்துச்சு