Legend of Cherokee Indian’s :-செரொகி இந்தியர்கள் பழங்கால பூர்வகுடி மக்கள் ,அவுங்க கூட்டத்துல ஒரு வழக்கம் இருந்துச்சு
பருவ வயச கடக்குற ஒவ்வொரு ஆண் மகனுக்கும் ஒரு பரிட்சை வச்சாங்க, அந்த தேர்வுல தேர்ச்சி செஞ்ச ஆண்கள மட்டுமே அவுங்க பெரியவனா ஏத்துக்கிட்டாங்க
அதனால எல்லா சின்ன பசங்களும் அந்த தேர்வுக்கு போவாங்க ,அந்த தேர்வ பத்தியும் என்ன நடக்குதுன்னும் யாரு கிட்டயும் சொல்லக்கூடாதுன்னும் கடவுள் மேல சத்தியம் செய்வாங்க ,
அதனால அந்த தேர்வு எப்படி நடக்கும்னுஅந்த சின்ன பசங்களுக்கு ஒண்ணுமே தெரியாது
அந்த தேர்வு எப்படி நடக்கும்னா தேர்வுக்கு போற பையனோட கண்ண துணியால கட்டிடுவாங்க , அப்படியே கொண்டுபோய் ஒரு காட்டுக்கு நடுவுல உக்கார வச்சுடுவாங்க
எந்த காரணம் கொண்டும் அந்த கட்ட அவுக்க கூடாது ,மறுநாள் காலைல வரைக்கும் அந்த இடத்துலயே இருக்கணும் , காலை வெயில் அடிக்க ஆரம்பிச்சதும் அந்த கண் கட்ட அவுத்து வீட்டுக்கு வரலாம்
அப்படிதான் ஒரு பையன கூட்டிட்டு ஒருத்தர் அந்த காட்டுக்கு போனாரு
கண் கட்டோட அங்க இருந்த பாறைமேல உக்கார வச்சுட்டு வந்தாரு
அந்த பையனுக்கு ஏதோதோ சத்தம் கேட்டுச்சு , காட்டு மிருகங்களோட சத்தமும் , அலறல் சத்தம்னு நிறைய அவனுக்கு கேட்டது
அது எதையும் கேக்காம தன்னோட தைரியத்தை பெருக்கிகிட்டு அந்த பையன் அந்த இடத்துலயே உக்காந்து இருந்தான்
மறுநாள் வெயிலடிச்சதுக்கு அப்புறமா மெல்ல தன்னோட கட்ட கலைச்சன் , அப்பத்தான் அங்க ஆச்சர்யமா அங்க அவுங்க அப்பா அடுத்த பாறை மேல உக்காந்து இருந்தாரு
அப்பதான் அவனுக்கு புரிஞ்சது ஒவ்வொரு போட்டியப்பவும் அவுங்க அப்பாக்கள் கூடவே இருப்பாங்கன்ற உண்மை
ஓவொருத்தருக்கும் அவுங்களோட குடும்பம் எப்பவும் உதவிக்கு இருக்கும் ,நாமதான் தனிமையில் இருக்கோம்ர நினப்புலயே வாழ்ந்துகிட்டு இருக்குறோம்ன்ற உண்மையும் அவனுக்கு புரிஞ்சது