ஜாகிர் ஹுசைன் கல்விக்கூடம் புனிதமான ஆலயம்

இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவி வகித்த முதல் இஸ்லாமியர். இவரது பதவிக்காலம் 1967 முதல் 1969 வரை

இவர் மிகச்சிறந்த கல்வியாளர். ஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பிஎச்.டி.,(Ph.D.,) என்ற டாக்டர் பட்டம் பெற்றவர்

டில்லியில் ‘ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம்’ என்ற பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணை வேந்தராகவும் இருந்தவர்

அப்போது அவருக்கு வயது 29

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இப்போது இருப்பது போன்ற பட்டப்படிப்பும் ஆராய்ச்சிப்படிப்பும் மட்டுமல்ல; தொடக்கக் கல்வியும் உயர்நிலைக் கல்வியும் அப்போது இருந்தன.

மலை மறக்க முடியாத நிகழ்ச்சிகள்

அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக அவர் பதவி வகித்த போதிலும், சின்னதறு மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் தொடக்க நிலை ஆசிரியராகவே அவர் இருந்தார் சிறுவர்களுக்குக் கல்வி போதிக்கும் போதே ஒழுக்கத்தையும் சுகாதாரத்தையும் போதித்து வந்தார்

ஒரு நாள் –

ஒரு வகுப்பறைக்கு அவர் பாடம் நடத்தச் சென்ற போது, வகுப்பறைக்கு வெளியே நிறைய பழைய காகிதங்களும், கிழிந்த பழைய துணிகளும் கிடப்பதைக் கண்டார். உடனே அவற்றையெல்லாம் பொறுக்கி எடுத்து தனது சட்டைப் பையில் திணித்துக் கொண்டார். பிறகு வகுப்புக்குள் சென்று பாடம் நடத்தினார்

பாடத்தை நடத்தி முடித்ததும் சட்டைப் பையில் திணித்திருந்த பழைய காகிதங்களையும் கிழிந்த துணிகளையும் எடுத்து மேஜையின் மேல் வைத்தார்

மாணவர்கள் அனைவரும் அவரை வியப்போடு

பார்த்தனர்

என்ன அப்படி வியப்போடு பார்க்கிறீர்கள் இவையெல்லாம் வகுப்பறைக்கு வெளியே ஒரே அசிங்கமாகக் கிடந்தன. நான்தான் இவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்தேன். கல்விக் கூடம் என்பது புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். இனிமேல் இது போன்ற குப்பைகளை வகுப்பறைக்கு வெளியே போட்டு அசிங்கப்படுத்தாமல், சுற்றுப்புறத்தைத் தாய்மையா வைத்திருக்கப் பாருங்கள்” என்றார் காமர் மலால்,

தாம் போட்ட குப்பைகளை பல்கலைக்கழகத்தின்

துணைவேந்தரே பொறுக்கி எடுத்து சுத்தப்படுத்தியதை கண்ட மாணவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.

அதன்பிறகு அவர்கள் வருப்பறையையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டனர்.