புலியாகுமா பேராசை பிடித்த பூனை -How the Mice Outsmarted the Cat

புலியாகுமா பேராசை பிடித்த பூனை -How the Mice Outsmarted the Cat:-ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்கிற கிராமத்துல ஒரு பண்ணை வீடு இருந்துச்சு அந்தப் பண்ணை வீட்டுல விவசாயம் செஞ்சு வாழ்க்கை நடத்திட்டு வர்ற ஒரு குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

The Farmhouse Family in the Village

அவங்க வருஷம் முழுசும் விவசாயம் செஞ்ச பொருட்களை அறுவடை செஞ்சு சந்தையில வியாபாரம் பார்த்து வாழ்க்கை நடத்திக்கிட்டு வந்தாங்க விவசாயம் செஞ்சு வர்ற தானியங்களை சேமிச்சு வைக்கிறதுக்கு ஒரு பெரிய குடோனோ வச்சிருந்தாங்க

Harvesting and Storing Grains

அந்த குடோன்ல நிறைய எலி தொந்தரவு இருந்துச்சு எவ்வளவு பாதுகாப்பா தானியங்கள பாதுகாத்து வச்சிருந்தாலும் அந்த எலிங்க நிறைய தானியங்களை தின்னுட்டும் நிறைய தானியங்களை வீணடிச்சுக்கிட்டும் இருந்துச்சுங்க இதையெல்லாம் பார்த்த அந்த வீட்டுக்காரர் ஒரு முடிவு செஞ்சாரு

The Mice Infestation in the Barn

சந்தைக்கு போயிட்டு வீட்டுக்கு வர்றப்ப ஒரு பெரிய பூனையை வாங்கிகிட்டு வந்தாரு அந்த பூனை குடோனில் இருந்த எல்லா எலிகளையும் பிடிச்சி திங்க ஆரம்பிச்சுச்சு

Buying the Cat and the Cat's First Hunt

இதைப் பார்த்த அந்த எலி கூட்டத்தோட தலைவன் இந்த பூனையை எப்படி சமாளிக்கிறது அப்படினு யோசிச்சாரு அவரு ரொம்ப புத்திசாலியா இருந்ததுனால சுலபமாக ஒரு யோசனை வந்துச்சு

The Clever Mouse Leader's Plan

அந்தப் பூனை காது படவே இந்த பூனைக்கு காட்டில் வாழல புலி ஆகணும்னு நினைப்பு போல இருக்கு ஆனா இந்த காட்டுல வாழுற புலியே ஒரு காலத்துல ஒரு பூனை தான் அதுவும் இங்க தான் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு நான் சொல்லுற தானியங்களை தினமும் தின்ன அந்த பூனை கொஞ்சம் கொஞ்சமா பெரிசாகி இன்னைக்கு புலியா மாறிடுச்சு அப்படின்னு சொல்லி பக்கத்துல இருந்த எலிகள் கிட்ட பேசிகிட்டு இருந்துச்சு அதே நேரத்துல தான் பேசுறது புதுசா வந்த பூனையோட காதுல விழுகிற மாதிரியும் பார்த்துக்கிடுச்சு

The Cat Overhears and Approaches

இந்தப் பேச்சு காதுல விழுந்த பூனை மெதுவா அந்த எலிகளோட தலைவன் கிட்ட வந்துச்சு நீங்க சொல்லுறது உண்மைதானா எனக்கும் புலி ஆகணும்னு ஆசையா இருக்கு அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும் அப்படின்னு சொல்லுச்சு உடனே அந்த எலி அந்த குடோன்ல இருந்த தானியங்களையே தினமும் பூனைக்கு நிறைய தின்ன சொல்லி கொடுத்துச்சு

The Mouse Offers Help and Feeds the Cat

புலியா மாற போற சந்தோஷத்துல இருந்த பூனையும் ஏன் எதுக்குன்னு கேட்காம நிறைய தானியங்களை தின்னு வேகமாக குண்டாயிடுச்சு,

The Cat Gorges and Grows Fat

அதுக்கு அப்புறம் அந்த பூனையினால ஓடியாடி எலிகளை பிடிக்க முடியல அதனால பசியில இருந்த பூனை தொடர்ந்து சேமிச்சு வச்சிருந்த தானியங்களையே திங்க ஆரம்பிச்சுச்சு

The Farmer Discovers and Chases the Cat Away

குடோன்ல வச்சிருக்கிற தானியங்களை பாதுகாப்பதற்கு தான் பூனை வாங்கிட்டு வந்தோம் இப்ப இந்த பூனையின் சேர்ந்து தானியங்கள் தானியங்களை திங்கிறது கவனிச்ச அந்த வீட்டுக்காரர் அந்த பூனைய அடிச்சு துரத்தி விட்டுட்டாரு மதிநுட்பத்தினால தங்களுக்கு வந்த பூனை ஆபத்த எலியோடு தலைவன் சுலபமா தீத்துக்கிட்டாரு அதனாலதான் அறிவ வளத்துக்கிட்ட நம்ம எங்க போனாலும் பொழச்சிக்கலாம் அதுக்கு தினந்தோறும் படிப்பும் அயராத உழைப்பும் தேவை

The Moral Reflection