Fat King Kids Story in Tamil – குண்டு ராஜா குழந்தை சிறுகதைகள் :- ஒரு ஊருல ஒரு நல்ல ராஜா இருந்தாரு அவருக்கு மக்கள் எல்லாரர்கிட்டயும் நல்ல பேர் இருந்தது

அவருக்கு அதிகமா சோம்பேறித்தனம் இருந்துச்சு, தினமும் கட்டில்லயே படுத்துகிட்டு சாப்பிட்டுக்கிட்டே இருப்பாரு
நாட்கள் போக போக அவரோட உடம்பு குண்டமாறிடுச்சு அவரால நடக்கக்கூட முடியல
மந்திரிமார்கள் எல்லோரும் ராஜாவோட நிலைமையை நினச்சு வருத்தப்பட்டாங்க

வெவ்வேறு நாட்டில இருந்து மருத்துவர்களை கூட்டிட்டு வந்து வைத்தியம் பாத்தாங்க
ஒன்னும் நடக்கல அப்பத்தான் ஒரு சாமியாரை பத்தி கேள்விப்பட்டு அவருகிட்ட போயி நடந்தத சொன்னாங்க
நான் தங்கியிருக்குற இடம் புனிதமான இடம் இந்த இடத்துல ராஜாவோட ஜாதகம் உச்சத்துல இருக்கும்போது இங்க நடந்து வந்து கால் பதிச்சா நல்லகிடுவாருன்னு சொன்னாங்க
இத கேட்ட மந்திரிகள் ராஜா கிட்ட போயி சொன்னாங்க நாம என்னைக்கு அங்க போகணும்னு கேட்டாரு ராஜா

இன்னைக்கு சாயந்திரம் 5 மணிக்கு உங்க ஜாதகத்துல நல்ல நேரம் அப்ப நாம நடந்து போகணும்னு சொன்னாங்க
உடல் எடை அதிகமா இருந்தாலும் மெதுவா நடந்து அங்க போனாரு ஆனா ஒண்ணுமே நடக்கல
சாமியார் சொன்னாரு உங்க ஜாதகத்துல உச்சமும் துக்கமும் மாரி மாறி வருது அதனால நாளைக்கு மதியம் இங்க வாங்கன்னு சொன்னாரு
மறுநாளும் நடந்து போனாரு ராஜா அன்னைக்கும் ஒன்னும் நடக்கல
இப்படியா மூணு மாசமா தினமும் நடக்க ஆரம்பிச்சாரு ராஜா
ஆனா இயற்க்கையாவே ராஜாவோட உடல் இளைக்க அரம்பிச்சது
மந்திரம் கிந்திரம்னு எதுவும் இல்ல இந்த சாமியார் தன்ன நடக்க வைக்கத்தான் இப்படி பொய்ச்சொல்லி இருக்காருன்னு தெரிச்சிகிட்ட அரசர்
அன்றுமுதல் தினமும் சத்துள்ள ஆகாரத்த மட்டும் சாப்பிட்டு நல்லா உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சாரு இது காரணமா அவரோட உடம்பு இளச்சு ஆரோக்கியமானதா மாறுச்சு