Donkeys and Horses – Mulla Tamil Stories- முல்லா கழுதையும் குதிரையும்

Donkeys and Horses – Mulla Tamil Stories- முல்லா கழுதையும் குதிரையும் :- முல்லா தன்னோட கிராமத்துல எளிமையான வாழ்கை வாழ்ந்துகிட்டு வந்தாலும் , சந்தோசமான வாழ்க்கையே வாழ்ந்துகிட்டு வந்தாரு

Mulla's Simple and Happy Life in the Village

அவருக்கு நிறய பணமோ ,நிறய நிலமோ ,நிறய வேலையாட்களோ தேவைப்படல ,இருந்தாலும் புத்திசாலியான முல்லா அத பயன்படுத்தி பணக்காரரா ஏன் அக்கலைனு அக்கம் பக்கத்துல இருக்கவங்க கேட்டுகிட்டே இருப்பாங்க ,அதுக்கு முல்லா எனக்கு தேவை படாத விஷயங்கள நான் ஏன் வாங்கணும் ,அதுக்காக எதுக்கு உழைக்கணும் ,எனக்கு இப்ப இருக்குற வசதியே போதும்னு சொல்லுவாரு

Villagers Questioning Mulla's Wisdom

ஒருநாள் சந்தையில வியாபாரம் செய்ய வீட்டுல இருந்து தன்னோட கழுதை மேல உக்காந்து பயணம் போனாரு முல்லா ,அப்பதான் பக்கத்துல வசிக்கிற ஒரு பணக்கார வியாபாரி தன்னோட குதிரையில் உக்காந்து சந்தைக்கு வந்துகிட்டு இருந்தாரு

Mulla Riding to the Market on His Donkey

அவரு நிறய நகைகள் போட்டுக்கிட்டு ,பட்டு துணி உடுத்தி கம்பீரமா குதிரையில வந்தாரு ,முல்லாவ பத்தி தெரிஞ்சி இருந்த அவர் ,இந்த ஆள் என்னவோ பெரிய புத்திசாலின்னு ஊர ஏமாத்திகிட்டு இருக்கான் இவன இன்னைக்கு முட்டாளாக்கணும்னு நினைச்சாரு அந்த பணக்காரர்,

The Rich Merchant's Grand Arrival and Scheming Thought

கூட்டமா மக்கள் இருக்குற பகுதிக்கு வந்ததும் என்ன முல்லா நீங்கதான் உலக புகழ் பெற்ற புத்திசாலியாச்சே ஏன் கழுதையில சவாரி செய்யுறீங்க ,உங்களுக்கு புது குதிரை வாங்குறதுக்கு வேணும்னா நான் பணம் தாரேன் ,என்னோட வீட்டுல வந்து வேலை செய்யுங்க ,இந்த உலக புகழ் எல்லாம் தூக்கி குப்பையில போட்டுட்டு பொழைக்குற வழிய பாருங்கன்னு சொன்னாரு

The Rich Merchant Taunts Mulla in the Crowded Market

இத கேட்ட கூட்டத்துல இருக்குறவங்க எல்லாரும் அடடா இந்த ஆளுக்கு நேரம் சரி இல்லை ,இந்த முல்லா கிட்ட வாய கொடுக்குறாரு ,கண்டிப்பா அவமான பட்டுதான் போக போறாருனு நினைச்சாங்க

The Crowd's Anticipation of Mulla's Humiliation

அதே மாதிரி முல்லா பேச ஆரம்பிச்சாரு ,மெதுவா தன்னோட கழுதையோட முதுகுல தட்டி புத்திசாலியான கழுதையே நீ தொடர்ந்து நல்லா உளைச்சனா நீயும் குதிரையில் பயணம் போகலாம் ,அங்க பாரு பணம் மட்டும் சம்பாதிச்சுட்டு ,ஒரு கழுதை குதிரை மேல போகுது பாருன்னு அந்த பணக்காரர பார்த்து கைகாட்டுனாரு

Mulla's Witty Response to the Donkey

இத கேட்ட அங்க இருந்த எல்லா வியாபாரிகளும் சிரிச்சிட்டாங்க ,அந்த பணக்கார வியாபாரிக்கு ரொம்ப அசிங்கமா போச்சு ,உடனே அங்க இருந்து வேகமா சந்தைய விட்டு வெளிய போய்ட்டாரு

The Merchants Laugh and the Rich Man Flees