சிங்கம் ,நரி ,கழுதை கதை -donkey fox and lion story moral:-ஒருகாட்டுல ஒரு சிங்கமும் நரியும் கழுதையும் பக்கத்துக்கு பக்கத்துல வாழ்ந்துகிட்டு வந்ததுங்க

ஒரு நாள் மூணுபேரும் சேர்ந்து கட்டுலுக்குள்ள வேட்டையாட கிளம்புச்சுங்க,அப்ப மூணுபேரும் ஒரு ஒப்பந்தம் போட்டுச்சுங்க ,நரி வேட்டையாட உதவி செய்யும் ,கழுத நல்ல இறையை கண்டுபிடிக்கும் ,சிங்கம் வேட்டையாடும்
இதுமாதிரி மூணு பேரும் சேர்ந்து வேட்டையாடி உணவ சரிசமமா பங்கு போட்டுக்கலாம்னு முடிவு பண்ணுச்சுங்க
அப்பத்தான் அங்க ஒரு கலை மானை கண்டுபிடிச்சது கழுத ,உடனே இத நரிக்கும் சிங்கத்துக்கும் சொல்லுச்சு கழுத

உடனே நரி ஒரு பக்கமா போய் மான் ஓடிபோகம பாத்துக்கிச்சு
உடனே சிங்கம் வேகமா அந்த மான் மேல பாஞ்சு அத வேட்டையாடுச்சு

சிங்கம் சொல்லுச்சு கழுதையரே உணவ மூணு பேருக்கும் பங்கு பிரிங்கன்னு.உடனே கழுத மூனுபேருக்கும் சமமா உணவ பங்கு பிரிச்சது.

இத பாத்த சிங்கத்துக்கு கோபம் வந்துச்சு ,அதுஎப்படி வீரனான எனக்கும் சமமா உணவு கொடுப்பன்னு சொல்லி ஒரே ஆடிய அடிச்சி கழுதைய கொன்னுடுச்சு

அடுத்ததா நரிகிட்ட உணவ பிரிக்க சொல்லுச்சு ,உடனே நரி தனக்கு கொஞ்சமா உணவும் ,சிங்கத்துக்கு அதிகமா உணவும் எடுத்து வச்சது

அடடா எப்படி நரியாரே இவ்வளவு பெருந்தன்மையா உணவ பிரிச்சீங்கன்னு கேட்டது ,அதுக்கு நரி கழுதைய காமிச்சது.
No moral was mentioned in the story