முட்டாள் கழுதையும் தந்திர நரியும் – Donkey and Fox story for Kids

முட்டாள் கழுதையும் தந்திர நரியும் – Donkey and Fox story for Kids:-ஒரு காட்டுல ஒரு நரியும் கழுதையும் ரொம்ப நல்ல நண்பர்களா இருந்துச்சுங்க.ரெண்டு ஒண்ணா சேந்தே உணவு தேடி காட்டுக்குள்ள போகும்

ஏதாவது ஆபத்து வந்துச்சுன்னா ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் காப்பாத்தணும்னு அத்தூண்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் இருந்துச்சு.

ஒருநாள் காட்டோட உள் பகுதிக்கு உணவு தேடி போச்சு நரி ,அப்ப அங்க திடீர்னு ஒரு சிங்கம் வந்துடுச்சு.சிங்கத்த பாத்து பயந்த நரி சுதாரிக்கிறதுக்கு முன்னாடி சிங்கம் அத பிடிச்சிடுச்சு

ரொம்ப பயந்துபோன நரி தன்னோட உயிர காப்பாத்திக்கிட நினைச்சது,உடனே அது சொல்லுச்சு சிங்க ராஜாவே சிங்க ராஜாவே எனக்கு ஒரு உதவி பண்ணுங்க.

என்ன நீங்க சாப்பிடாம விட்டுடீங்கன்னா உங்களுக்கு ஒரு கொழுத்த கழுதைய சாப்பிடுறதுக்கு கொண்டு வரேன்னு சொல்லுச்சு

நரிய சாப்பிட்டா இன்னைக்கு மட்டும் பசியாறலாம் ,அதே நேரத்துல கழுதைய சாப்பிட்டா ஒரு வாரம் சாப்பிடலாம்னு நினச்ச சிங்கம் அது எப்படி நீ சொன்னா கழுத இங்க வரும்னு கேட்டுச்சு

அதுக்கு நரி சொல்லுச்சு அந்த கொழுத்த கழுத என்னோட நண்பன்தான் ,நான் கூப்பிட்டா எங்க வேணும்னாலும் வரும்னு சொல்லுச்சு

இத கேட்ட சிங்கம் அந்த நரிய போக விட்டுச்சு.தன்னோட இருப்பிடத்துக்கு போன நரி தன்னோட நண்பனான கழுதைய கூட்டிகிட்டு திரும்ப அங்க வந்துச்சு

மறைஞ்சிருந்த சிங்கம் அந்த கழுதைய பிடிச்சி அடிச்சிடுச்சு,அதுக்கு அப்புறமா ஓரமா நின்னுகிட்டு இருந்த நரிய தாவி பிடிச்சது

அடடா சிங்க ராஜாவே நான் சொன்ன மாதிரியே கழுதைய கொண்டுவந்து விட்டுட்டனே என்ன எதுக்கு மறுபடியும் பிடிக்கிறீங்கன்னு கேட்டுச்சு

அதுக்கு சிங்க ராஜா சொல்லுச்சு உன்னோட உயிரை காப்பாத்துறதுக்கு ,உன் கூட இருக்குற நண்பனையே பலி கொடுக்க துணிஞ்சு உனக்கு இந்த தண்டன சரிதான்

உன்ன எல்லாம் நம்ப முடியாது ,மறுபடியும் உனக்கு ஆபத்து வந்துச்சுனா நீ என்னையும் காட்டி கொடுத்துடுவ ,அதனால இன்னைக்கே ஒண்ண கொள்ள முடிவு பண்ணிட்டேன்னு சொல்லி ஒரே அடி அடிச்சது சிங்கம்

நீதி :- கேட்ட நண்பர்கள் தீமையையே பரிசாக வழங்குவர்