Courage and Destiny- விதியும் மதியும்:-ஒருநாள் அக்பரோட அரசவையில் ஒரு வினோதமான விவாதம் நடந்துச்சு
எல்லாரும் விதியையும் ,மதியையும் பத்தி பேசிகிட்டு இருந்தாங்க
பீர்பால் சொன்னாரு உன்னதமான அறிவும் ,சமயோஜித புத்தியும் இருந்தா விதியை மதியால் வெல்லலாம்னு சொன்னாரு
இத ஒத்துக்காத அக்பர் ,பீர்பாலோட வாதம் தவறுன்னு நிரூபிக்க நினைச்சாரு
உடனே அரண்மனை யானை பாகனை கூப்பிட்டாரு ,பீர்பால் நகர்வலம் போகும்போது அவரு ஓட முடியாத தெருவுல நம்ம அரண்மனை யானைய அவுத்து விடுன்னு சொன்னாரு
மறுநாள் அரசரும் சில மந்திரிகளும் பீர்பால் எப்படி விதிய மதியால வெல்லுறார்னு பாப்போம்னு சொல்லிட்டு காத்துகிட்டு இருந்தாங்க
அப்பத்தான் பீர்பால் நகர்வலம் புறப்புட்டு போனாரு ,அப்ப ஒரு குறுகிய சந்துல அவர் நடந்து போனப்ப ,யானை பாகன் யானையை அவுத்து விட்டுட்டாரு
யானை பீர்பாலை நோக்கி ஓடி வந்துச்சு,ஒரு நிமிஷம் திகைச்சு போன பீர்பால்
இந்த சிக்கல்ல இருந்து எப்படி தப்பிக்கலாம்னு யோசிச்சாறு ,அப்ப அங்க ஒரு நாய் படுத்து இருந்துச்சு
உடனே பீர்பால் அந்த நாய தூக்கி அந்த யானை மேல போட்டாரு
நாயோட நகம் யானையோட கழுத்துல பதிஞ்சுச்சு , உடனே யானை திரும்பி ஓட ஆரம்பிச்சுச்சு
இத மறைஞ்சிருந்து பாத்த அக்பர் ,ஓடி வந்து பீர்பால பாராட்டுனாரு , விதிய மதியால் வெல்லலாம்னு இப்ப நான் புரிஞ்சிக்கிட்டேனு சொன்னாரு