Benjamin Carson Motivational Story – தன்னம்பிக்கை கதைகள் :-ஒரு ஸ்கூல்ல ஒரு சின்ன பையன் படிச்சுக்கிட்டு இருந்தான்
அவன் கொஞ்சம் சுமாராத்தான் படிச்சான்
ஆனா அவனோட திறம என்னன்னு தெரிந்த அவுங்க அம்மா ஒரு மூணு கட்டளை இட்டாங்க
ஒரு வாரத்துக்கு ரெண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமே பாக்கணும்
வீட்டு பாடமும் ,படிக்கிற வேலையும் முடிச்ச பிறகுதான் சாப்பிடணும்
மாசத்துக்கு ரெண்டு புத்தகம் படிக்கணும் அதப்பத்தி ஒரு கட்டுரையும் எழுதணும்
இந்த மூணு கட்டளையையும் அந்த சின்ன பையன் தவறாம கடைபிடிச்சான்
சில காலங்களுக்கு பிறகு ஒருநாள் டீச்சர் ஒரு கஷ்டமான கேள்வி கேட்டாங்க கிளாஸ்ல இவன தவிர யாருக்குமே இந்த கேள்விக்கு விடை தெரியல
அப்பத்தான் அவன் உணர்ந்தான் தன்னோட அம்மா சொன்ன அந்த புத்தகம் படிக்கிற பழக்கதுனாலதான் தனக்கு இவ்வளவு அறிவு வருதுன்னு நினைச்சான்
அதனால எல்லா லைப்ரரிலயும் சேந்து நிறைய புத்தகம் படிச்சு தன்னோட அறிவை வளர்த்துக்கிட்டான்
அவன் வளர்ந்த பிறகு அந்த நாட்டுலயே மிக பெரிய மருத்துவரா இருந்தான்
அந்த பையன் தான் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணரும் மருத்துவருமான பெஞ்சமின் கார்சன்