அறிஞர் அண்ணாவின் திறமைகளையும் சாதனைகளையும் பாராட்டி அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது
பட்டம் பெறுவதற்கு முன், பட்டம் பெற இருப்பவர்கள் யேல் பல்கலைக்கழக அறிஞர்களைச் சந்தித்து உரையாடுவது வழக்கம்
பட்டம் பெற இருப்பவர், அதற்குத் தகுதியானவர் தானா என்பதை அறிய மிகவும் நாகரீகமாக நடத்தப்படும் சோதனைதான் அந்த உரையாடல்
அந்த உரையாடலின்போது யேல் பல்கலைக்கழக
அறிஞர்கள் அண்ணாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டனர்.
பிகாஸ் என்ற சொல்லை அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று முறை வரும்படி அமைத்து ஓர் ஆங்கில வாக்கியம் அமைக்க உங்களால்? வேண்டும் முடியுமா
இதுதான் அறிஞர்கள் கேட்ட கேள்வி
அதற்கு அண்ணா புன்னகைத்தவாறே, “நோ சென்டன்ஸ் பிகின்ஸ் ஆர் எண்ட்ஸ் வித் ‘பிகாஸ் பிகாஸ், பிகாஸ் இஸ் எ கன்ஜக்ஷன்! (No sentence begins or ends with ‘because’, because’, “because is a conjunction) என்றார்.
இதன் தமிழ் விளக்கம் இது
ஏனென்றால்’ என்ற சொல்லைக் கொண்டு எந்த ஒரு வாக்கியமும் தொடங்குவதுமில்லை; முடிவது மில்லை. ‘ஏனென்றால்’, ‘ஏனென்றால் என்பது ஓர் இணைப்புச் சொல்.
அறிஞர் அண்ணாவின் இந்த ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்த யேல் பல்கலைக்கழக அறிஞர்கள் ,டாக்டர் பட்டம் பெற அவர் தகுதியுடையவரே என்பதை புரிந்து கொண்டனர்
1 thought on “அண்ணாவின் ஆங்கில அறிவு”
Comments are closed.