மார்பில் உதைத்த கால் – அக்பர் பீர்பால் கதை

 மார்பில் உதைத்த கால் – அக்பர் பீர்பால் கதை :- அக்பர் ஒரு நாள் அரசவையில் அமர்ந்திருந்தார் அரசவை பெரியவர்களிடமும் மந்திரிமார்கள் இடமும் முக்கிய உரையாடல்களை முடித்துவிட்டு ஒரு கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அக்பர் பீர்பால் கதை

 நேற்று இரவு என் மீது ஏறி எனது நெஞ்சின் மீது ஒருவன் உதைத்து விட்டான் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்டார்.

அக்பர் பீர்பால் கதை

 அதைக் கேட்ட அனைவருக்கும் திகைப்பாக இருந்தது என்ன? இத்தனை சவால்களையும் மீறி ஒருவன் அரண்மனைக்குள் வந்து அரசரின் அறைக்குள் சென்று அவர் நெஞ்சின் மீது கால்வைத்து விட்டானா என்று அதிர்ச்சி அடைந்தனர்.

அக்பர் பீர்பால் கதை

 அவையில் இருந்த அனைவரும் அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

 இதனை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அரசர் மெல்லிய புன்னகையுடன் காத்திருந்தார் பீர்பால் இதற்கு என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் பீர்பாலின் முகத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தார்.

 கடைசியாக பேச தொடங்கிய பீர்பால் அரசே உங்கள் நெஞ்சின் மீது மிதித்த கால்களுக்கு தங்க கொலுசுகளையும் வைடூரியங்கள் நிறைந்த நகைகளையும் போட்டு அவற்றிற்கு முத்தமிடுங்கள் என்று சொன்னார் பீர்பால்.

அக்பர் பீர்பால் கதை

 இதைக் கேட்ட அரசர் சிரித்துக்கொண்டே அது எப்படி பீர்பால் அவர்களே என்னை மிதித்தவன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா என்று கேட்டார்.

 அரண்மனையில் இருந்த அவர்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது அரசரை உதைத்தவனுக்கு முத்தமிடுவதா என்று கேள்வி எழுப்பினர் அதற்கு பீர்பால் விளக்கமான விடையை கூறினார்.

 அரசவை பெரியோர்களே நமது சக்கரவர்த்தியின் சக்தியை பற்றி உங்களுக்குதெரியாதா . இவ்வளவு காவலையும் மீறி ஒருவன் அரண்மனைக்குள்ளே வர முடியாது என்கின்ற பொழுது அரசர் உறங்கும் அறை வரை  ஒருவன் வந்து அவர் படுக்கையின் மீது ஏறி அவரது நெஞ்சின் மீது கால் வைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்றால் அது நமது குட்டி  இளவரசராக மட்டுமே இருக்க முடியும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா அதைத்தான் அரசரும் கூறுகிறார் என்று சொன்னார்

அக்பர் பீர்பால் கதை

 இதைக் கேட்ட அனைவருக்கும் அடடா இது தெரியாமல் போயிற்றே என்று வருத்தம் தெரிவித்தனர். கேள்விக்கான விடையை தேடுவதிலேயே ஆர்வமாக இருந்த நாங்கள் கேள்வியின் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் போய் விட்டோம் என்று பீர்பாலிடம் மன்னிப்பு கோரினர் சபையோர்