அரண்மனை சத்திரம்-அக்பர் பீர்பால் குழந்தைகள் கதை :-பீர்பால் ஒரு நாள் அரசு அலுவல் காரணமாக காட்டு வழியில் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவ்வாறு செல்லும் வழியில் மாலை மயங்கி இரவு வந்துவிட்டது. உடனே இன்று எங்காவது ஒரு இடத்தில் தங்கி விட்டு நாளை காலை பயணத்தை தொடங்கலாம் என்று முடிவுசெய்த பீர்பால் தங்குவதற்கு ஏதாவது இடம் கிடைக்குமா என்று தேடி அலைந்தார்.

அப்பொழுது ஒரு சத்திரம் போன்ற ஒரு இடம் கண்ணில் பட்டது. அதனை தமது அரசரின் சத்திரம் என்று நினைத்த பீர்பால் அங்கு சென்று பார்த்தார் அங்கு காவலர்கள் யாரும் இல்லாமலும் வேலையாட்கள் யாரும் இல்லாமல் இருந்தது .இருந்த போதிலும் அங்கு உணவு தயாராக இருந்தது பக்கத்தில் இளைப்பாறுவதற்கு ஏதுவாக ஒரு அறையும் தயார் நிலையில் இருந்தது.

அக்பரின் ஆளுமைக்கு உட்பட்ட இந்த சத்திரத்தை நாம் இன்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த பீர்பால் உணவை நன்றாக உண்டுவிட்டு ஓய்வெடுக்கும் அறையில் படுத்து உறங்கினார்.
உண்மையில் அது பக்கத்து நாட்டு இளவரசர் வேட்டையாடிவிட்டு இளைப்பாறும் ஓய்வு அரண்மனை ஆகும். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு வந்த பக்கத்து நாட்டு இளவரசர் தனது உணவை யாரோ உண்டு விட்டு தமது ஓய்வெடுக்கும் அறையில் உல்லாசமாக படுத்திருப்பதை கண்டார்.

கோபமுற்ற அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பீர்பாலை தட்டி எழுப்பினார். உனக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் அரசனாகிய எனது உணவை உண்டுவிட்டு எனது கட்டிலில் படுத்து உறங்குகிறாய் இது என்ன சத்தம் என்று நினைத்தாயா என்று கோபமாக கூறினார்.

ஒரு நிமிடத்தில் நடந்த தவறை உணர்ந்து கொண்ட பீர்பால் சமயோஜிதமாக யோசித்து. அரசே இது உங்கள் ஓய்வு அரண்மனையாகவே இருக்கலாம், இருந்த போதிலும் இதை சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை என்று கூறினார்.
இது என்ன எனது ஓய்வெடுக்கும் அரண்மனை உனக்கு சத்திரமா. எந்த அடிப்படையில் சத்திரம் என்று அழைத்தாய் சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை மறுநாள் வேறொரு ஆள் வருவார் அதுபோன்றா இருக்கிறது இந்த அரண்மனை என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பொறுமையாக பதில் அளித்த பீர்பால் அரசே இன்று நீங்கள் இருக்கிறீர்கள் சில காலங்களுக்கு முன்பு உங்கள் தந்தையார் இந்த அரண்மனையை பயன்படுத்தி வந்து இருக்கலாம், அதற்கு முன் உங்கள் பாட்டனார் இந்த ஓய்வு அரண்மனையை உபயோகப்படுத்தி இருக்கலாம். சில காலம் கழிந்த பின்பு உங்கள் மகன் இந்த அரண்மனையை ஓய்வுக்கு பயன்படுத்தலாம் உண்மைதானே என்று கேள்வி கேட்டார் பீர்பால்.

அவர் கூறியதன் உண்மை நிலையை அறிந்து கொண்ட அரசர் அமைதியாக இருந்தார்.
மேலும் தொடர்ந்த பீர்பால் அதனால் சத்திரம் என்று கூறுவதில் தவறில்லை. என்று கூறினார் மேலும் அக்பர் சக்கரவர்த்தியின் சத்திரங்கள் அனைத்தும் இதுபோன்று பயணிகளுக்கு உயர்தர உணவும் ஓய்வு எடுப்பதற்கு இதைவிட நல்ல அறையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனவே இதனை சத்திரம் என்று நினைத்துக் கொண்டேன் என்று விளக்கமாக கூறிய பீர்பால் அரசரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
இந்த விளக்கமான விடையை கேட்ட பக்கத்து நாட்டில் இளவரசருக்கு அப்போதுதான் தோன்றியது வந்திருப்பது சாதாரண ஆளாக இருக்க முடியாது, ஒரு அரசரின் முன்பு இவ்வளவு தெளிவாக பேசக்கூடியவர் மிக முக்கியமான ஒரு ஆளாக தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு நீங்கள் யார் என்று கேள்வி கேட்டார். அதற்கு தான் பீர்பால் எனவும் தன் அக்பரின் அரசவையில் ஆலோசகராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

பீர்பால் மற்றும் அக்பரின் புகழை உலகம் முழுவதும் அறிந்து வைத்திருந்த படியினால் பீர்பாலை நேரில் சந்தித்தது தமக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் உலக புகழ்பெற்ற பீர்பால் உடன் இப்படிப்பட்ட ஒரு உரையாடல் நிகழ்ந்தது எண்ணி தன் மிகவும் மகிழ்ந்த தாகவும் கூறி அவரை வணங்கினார் அந்த பக்கத்து நாட்டு அரசர்