A Dog and A Son-In-Law – மருமகனின் துரோகம்-Akbar Birbal Story :- அக்பர் ஒருநாள் பீர்பால் கிட்ட துரோக மனப்பான்மை உள்ள மிருகமும் ,நன்றி உணர்வு மிக்க மிருகத்தையும் எங்கிட்ட கூட்டிட்டு வாங்கனு சொன்னாரு
மறுநாள் பீர்பால் ,தன் வீட்டு நாயையும் ,தன்னோட சொந்த மருமகனையும் அரண்மனைக்கு கூட்டிட்டு வந்து அக்பர் முன்னாடி நிறுத்துனாரு
அக்பர் சொன்னாரு இதுல யாருக்கு நன்றி உணர்வும் ,யாருக்கு துரோக மனப்பான்மையும் இருக்குனு கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு ஒரு ரொட்டி துண்டு கொடுத்தா போதும் தன்னோட உயிர கூட கொடுக்க தயங்காத இந்த நாய் தான் உலகத்துலயே நன்றி உணர்வு அதிகம் உள்ள மிருகம்
அதே நேரத்துல என்னோட ,பொண்ணையும் கொடுத்து ,அதிக பணமும் கொடுத்து ,கேட்டதெல்லாம் கொடுத்தும் இன்னும் வேணும்னு இருக்குற இவரோட மனப்பான்மை ஒரு துரோக மனப்பான்மை ,இவருக்கு எதாவது ஆபத்து வந்தா கூட என்ன தான் குற்றம் சொல்லுவாருனு சொன்னாரு
இத கேட்ட அக்பர் அப்ப உங்க மருமகனுக்கு தூக்கு தண்டனை கொடுத்துடலாம்னு சொன்னாரு
பீர்பாலுக்கு தூக்கி வாரி போட்டுச்சு ,இருந்தாலும் சமாளிச்சிகிட்டு சொன்னாரு ,அரசே நான் என் மருமகனை மட்டும் குத்தம் சொல்லல இந்த உலகத்துல இருக்குற எல்லா மருமகன்களோட எண்ணமும் இதுதான்
தங்களோட மருமகன் கூட இதுல உண்டு ,இவ்வளவு ஏன் நீங்களே ஒருத்தருக்கு மருமகன் தான் தூக்குல போடுறதுனா முதல்ல உங்களத்தான் தூக்குல போடணும் அக்பர் அவர்களேனு சொன்னாரு
இத கேட்ட அக்பர் எனக்கு நகைசுவையா பதில் சொன்ன உங்க யுக்தி எனக்கு புடிச்சிருக்குனு சொன்னாரு