காக்கையின் தந்திரம் -The Lazy Crow’s Lesson

காக்கையின் தந்திரம் -The Lazy Crow’s Lesson:-குவா காடு ரொம்ப பெருசா இருந்துச்சு அதுல நிறைய மரங்களும் நீர் நிலைகளும் செழிப்பாய் இருந்துச்சு அதனால அந்த காட்டுல நிறைய குட்டிக் குட்டி மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

The Lush Kuva Forest

அந்தக் குட்டி குட்டி மிருகங்களுக்கு சுலபமா சாப்பிடுவதற்கு உணவு கிடைச்சுக்கிட்டே இருந்துச்சு இருந்தாலும் சேமிச்சு வைக்கணும் அப்படிங்கிற பழக்கத்தை அதுங்களுக்கு எல்லாம் மூத்தவங்க சொல்லிக் கொடுத்து இருந்தாங்க அதனால கிடைக்கிற உணவுப்பொருள பாதிய சாப்டுட்டு மீதிய தங்களோட வீடுகள்ல சேமிச்சு வச்சுக்கிட்டு இருந்துச்சுங்க

 The Habit of Saving

என்னதான் சுலபமா சாப்பிடுவதற்கு உணவு கிடைச்சாலும் அங்க ஒரு காக்கா ரொம்ப சோம்பேறித்தனமா இருந்துச்சு அது எப்பவும் அடுத்தவங்க சேமிச்சு வைக்கிற உணவ திருடி சாப்பிட்டுக்கிட்டே இருந்துச்சு நாள் போக போக காக்காவை திருட விடாம உணவை எல்லாம் ஒளிச்சு வைக்க ஆரம்பிச்சுட்டாங்க குட்டி மிருகங்கள்,அதனால காக்காவுக்கு உழைச்சு சாப்பிட வேண்டிய நிலை வந்துச்சு ,இருந்தாலும் காக்காவுக்கு திருடி தின்கிற பழக்கத்த விட முடியல

The Lazy Crow's Theft

அப்பத்தான் காக்கா ஒரு முடிவு செஞ்சுச்சு இந்த குட்டி மிருகங்களை ஏமாத்தனோம்னா தான் நமக்கு சுலபமா எந்த வேலையும் செய்யாம நல்ல உணவு கிடைக்கும் அப்படின்னு நினைச்சிட்டு உடனே முயல் கூட்டத்துக்கிட்ட போயி என்ன முயலாரே இன்னைக்கு நீங்க சேமிச்சு வச்ச உணவு எல்லாம் நல்லாத்தான இருக்கு அப்படின்னு கேட்டுச்சு

The Crow's Deceptive Plan

அதுக்கு முயல்களோட தலைவன் சொன்னாரு நாங்க சேமிச்சு வச்ச உணவுகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு உன் வேலைய நீ பாரு அப்படின்னு சொல்லுச்சு அப்பத்தான் காக்கா சொல்லுச்சு இல்ல அணில்கள் சேமிச்சு வச்ச உணவுகள்ல விஷச்செடிகளோ வேற எதோ இருந்துச்சாம் அதனால அணிகள் அணில்கள் நிறைய உடம்பு சரியில்லாமல் போயிடுச்சுங்கலாம் அதனால் முதலில் என்கிட்ட குடுங்க நான் சாப்பிட்டு பார்த்து எந்தெந்த உணவு எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லுறேன் அதை மட்டும் நீங்க சேமிச்சு வச்சுக்கோங்க அப்பத்தான் நீங்க உடம்பு சரியில்லாமல் போக மாட்டீங்க அப்படின்னு சொல்லுச்சு

The Rabbit Leader's Suspicion

காக்காயோட தந்திரத்தை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த முயல்களோட தலைவன் இந்த காக்காக்கு சோம்பேறித்தனம் போகிற அளவுக்கு ஒரு பாடம் கற்பிக்கணும் அப்படின்னு நினைச்சுச்சு நேர தன்னோட வலைக்கு உள்ள போன முயல்களோட தலைவன் ஒரு வேர்க்கடலையை உடைத்து அதுக்குள்ள கோந்து ஊத்துச்சு அதை மறுபடியும் மூடி வெளியில கொண்டு வந்து இந்தாங்க காக்கையாரே இதை சாப்பிட்டு பார்த்து இது நல்லா இருக்கா கெட்டுப் போகாமல் இருக்கா அப்படின்னு பார்த்து சொல்லுங்க அப்படின்னு கொடுத்துச்சு

Preparing the Lesson

அடுத்தவங்க கிட்ட திருடி ஏமாத்தி சாப்பிடுற காக்கா எதுவுமே யோசிக்காமல் அந்த கோந்து வச்ச நிலக்கடலையை அப்படியே கடிச்சுச்சு உள்ளே இருந்து வெளியே வந்த கோந்து காக்காவோட வாயில ஓட்டிகிடுச்சு , அதனால தன்னுடைய வாயை திறக்கவே முடியல காக்கா எவ்வளவோ முயற்சி செஞ்சும் அதோட வாய் திறக்கவே இல்ல அப்பத்தான் முயல் சொல்லுச்சு எங்களையெல்லாம் என்ன முட்டாள்னு நினைச்சியா

The Crow's Humiliating Mistake

நாங்க சாப்பிட்டு பார்த்துட்டு தான் எல்லா பொருளையும் சேமிச்சு வைக்கிறோம் ,நீ சேமிச்சு வைக்க வேணாம் அன்னன்னைக்கு தேவையான பொருளை நீயா தேடி சம்பாதிக்கிறதுக்கு உனக்கு சோம்பேறித்தனமா இருக்கு அதனால இது உனக்கு சரியான தண்டனை தான் அப்படின்னு சொல்லுச்சு முயல்களோட தலைவன் இதைக் கேட்ட காக்கா நம்ம ரொம்ப தப்பு செஞ்சுட்டோம் அப்படின்னு வருத்தத்தோட அங்கு இருந்து பறந்து போச்சு

The Lesson Learned