Athipalayam aamayum -அத்திப்பழமும் ஆமையும்-The Turtle and the Lightbulb Fig:-வனவிலங்குகள் நிறைஞ்சு இருந்த குவா காட்டுல நிறைய பெரிய பெரிய மரங்கள் இருந்துச்சு அதுல ஒரு அத்திப்பழம் மரமும் இருந்துச்சு அந்த மரம் ரொம்ப பெருசா வளர்ந்து நிறைய காய் காச்சி தொங்கிக்கொண்டு இருந்துச்சு

அந்த அத்தி மரம் ஒரு குளத்துக்கு பக்கத்துல இருந்துச்சு அந்த குளத்துல நிறைய நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுல ஒரு ஆமையும் இருந்துச்சு

அந்த ஆமை பெருசா வளர்ந்து நிக்கிற அத்தி மரத்து நிழலில் வந்து தான் தினமும் ஓய்வெடுக்கும் அப்படி ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கும்போது நிறைய பறவைகள் பறந்து வந்து அத்தி மரத்துல இருந்த பச்சை காய்களை கொத்தி சாப்பிட்டுகிட்டு இருக்கிறத பார்த்துச்சு உடனே ஆமைக்கும் அந்த காய்களை சாப்பிடணும்னு ஆசை வந்துச்சு

அந்தப் பறவைகள் ஏதாவது காய்களை கீழே போடும் அதை எடுத்து அத்திக்காய் எப்படி இருக்குன்னு சுவைச்சு பார்த்திடலாம்னு மரத்தை சுத்தி சுத்தி வந்துச்சு ஆனா ஒரு காய் கூட கீழ இல்ல அப்பத்தான் அத்திமரம் கேட்டுச்சு எதுக்குப்பா பிள்ளையார சுத்துற மாதிரி என்ன சுத்திக்கிட்டு இருக்க அப்படின்னு கேட்டுச்சு

அப்பத்தான் அந்த ஆமை சொல்லுச்சு நீங்க இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்கீங்க உங்களுடைய காய்களை நிறைய பறவைகள் தேடி வந்து சாப்பிடுது அதனால அத்திக்காய் ரொம்ப சுவையா இருக்குன்னு நினைச்சேன் இந்தப் பறவைகள் எதையாவது கீழ போடும் அதை எடுத்தாவது சுவைத்து பார்க்கலாம் அப்படின்னு நினைச்சேன் என்னால உங்க மேல ஏறி வந்து அத்திக்காய்களை பறிக்க முடியாது அந்தப் பறவைகள் மாதிரி சிறகுகள் இருந்தா கூட பறந்து வந்து காய்களை கொத்தி தின்னு இருப்பேன் ஆனா நீர்வாழ் உயிரினமான எனக்கு அத்திக்காய் சாப்பிடுற குடுப்பன இல்ல போல அப்படின்னு வரிசையா பொலம்ப ஆரம்பிச்சுச்சு

அப்பத்தான் அந்த அத்திமரம் தன்னோட கிளைகளை ஆட்டி ஒரு சிரிப்பு சிரிச்சுச்சு உனக்கு பொறுமையின் பெருமை தெரியுமா? அப்படின்னு கேட்டுச்சு அத்திமரம் என்ன சொல்லுதுன்னு புரியாத ஆமை அத்தி மரத்தை பாத்துக்கிட்டே இருந்துச்சு அப்பத்தான் அந்த அத்திமரம் சொல்லுச்சு யார் ஒருத்தர் தனக்கு வேண்டியது கிடைக்கனும்னு தினம் முயற்சி செய்றாங்களோ தினம் தினம் அதுக்காக பயிற்சி செய்றாங்களோ அதுக்காக பொறுமையா காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் அப்படின்னு சொல்லுச்சு அந்த அத்திமரம்

அத்திக்காய் கிடைக்காத விரக்தியில் இருந்த அந்த குட்டி ஆமை அத்திமரம் சொன்னத மந்திரம் போல நினைச்சுக்கிட்டு தூங்க போயிடுச்சு மறுநாள் இருந்து தினமும் வந்து அத்தி மரத்தை சுத்தி சுத்தி பார்க்கும் ஆனா அதுக்கு எந்த காயும் கீழ கிடைக்காது இருந்தாலும் தன்னோட முயற்சிய கொஞ்சம் கூட நிறுத்தவே இல்ல அந்த ஆமை அப்படி இருக்கப்பத்தான் ஒரு நாள் அத்தி மரத்து அடியில ஒரு பழம் கிடந்துச்சு

அந்தப் பழம் அத்திக்காய் மாதிரியே இருக்கே அப்படின்னு நினைச்ச ஆமை அதை எடுத்து சாப்பிட்டுச்சு அத்திப்பழத்தோட சுவையில ஆனந்தமான ஆமை சொல்லுச்சு அடடா அத்திக்காய் தான் சுவையா இருக்கும்னு நினைச்சேன் ஆனா இந்த பழம் அதைவிட சுவையா இருக்கே அப்படின்னு கேட்டுச்சு அப்பத்தான் அத்திமரம் சொல்லுச்சு அது அத்திப்பழம் நீ தினமும் எனக்காக காத்து இருந்த நீ காத்து இருக்க என்னுடைய காய்கள் எல்லாம் இப்ப கனிஞ்சி பழமா மாறிடுச்சு புளிப்பான சுவையுடைய அத்திக்காய் உனக்கு கிடைக்கல என்ற வருத்தத்துல உன்னோட முயற்ச்சியை விட்டுருந்தேனா இவ்வளவு சுவையான அத்திப்பழம் உனக்கு கிடைச்சி இருக்காது இனிமே தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் நம்பிக்கையும் வச்சு உன் வாழ்க்கையை நடத்து அப்படி என்று சொல்லுச்சு அந்த அத்திமரம்

வாழ்க்கைக்குத் தேவையான மிகப்பெரிய தத்துவம் இது அப்படின்னு நினைச்ச ஆமை அன்னையிலிருந்து புத்திசாலியா நடந்து நிறைய புகழ் அடஞ்சிச்சு
