Is Someone Snoring? Mulla Story – குறட்டை விட்ட முல்லா :- உலக புகழ் பெற்ற முல்லாவுக்கு ஒரு சின்ன பிரச்னை இருந்துச்சு ,அவரு நல்லா தூங்க ஆரம்பிச்சுட்டாருன்னா அவரு விடுற குறட்டையில யாருமே தூங்க முடியாது அந்த அளவுக்கு குறட்டை சத்தம் இருக்கும்

முல்லாவோட குறட்டை சத்தம் பக்கத்து வீடு வரைக்கும் கேக்கும் ,ஒவ்வொருநாளும் பக்கத்து வீட்டுல இருக்குற முல்லா மனைவியோட நண்பிகள் எல்லாம் அந்த என்ன குறட்டை சத்தம் நேத்து கொஞ்சம் கூடுதலா கேட்டுச்சு நேத்து நீ எப்படி தூங்குனனு கேட்டு கிண்டல் செய்வாங்க

ஒரு நாள் சந்தையில ரொம்ப நேரம் உழைச்சிட்டு வந்து படுத்த முல்லா அளவுக்கு அதிகமா குறட்டை விட்டாரு ,இத பார்த்து பொறுமை இழந்த முல்லா வோட மனைவி முல்லாவ தட்டி எழுப்புனாங்க ,தடால்னு முழிப்பு தட்டி எழுந்திரிச்ச முல்லா எதுக்கு என்ன எழுப்புனனு கேட்டாரு

அதுக்கு முல்லாவோட மனைவி சொன்னாங்க நீங்க விடுற குறட்ட சத்தம் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு கூட கேக்குது ,அவுங்க தினமும் என்ன கிண்டல் செய்யுறாங்கனு சொன்னாரு ,திடுக்கிட்ட முல்லா என்னது நான் குறட்ட விடுறனானு கேட்டாரு ,

அதோட பக்கத்து வீட்டு காரங்க நம்ம வீட்ட ஒட்டு கேக்குறாங்க நீ அவுங்க கூட சண்டை போடாம என்கிட்ட சண்டை போடுறன்னு சொல்லி மனைவிகிட்ட சண்டை போட்டாரு ,தனக்கு குறட்டை விடுற பழக்கம் இருக்குறத மறக்கணும்னு நினைச்சாரு முல்லா ,முல்லா எப்படியாவது இந்த பிரச்னையை சமாளிக்கணும்னு முடிவு செஞ்சாரு

நான் குறட்ட விட்டுருந்தன்னா எனக்குதான முதல்ல சத்தம் கேக்கும் ,அப்படி இது வரைக்கும் எனக்கு சுத்தம் கேக்கலையே ,ஒரு வேல நீ குறட்டை விடுறன்னு நினைக்குறேன் அதான் அது உனக்கே நல்லா சத்தமா கேக்குதுனு சொன்னாரு

நீங்க தூக்கத்துல விடுற குறட்டை உங்களுக்கு எப்படி தெரியும் ,இன்னைக்கு முழிச்சு உக்காந்து யாரு குறட்டை விடுறானு கண்டுபிடிங்கனு சொல்லிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டாங்க , விடிய விடிய முழிச்சு உக்காந்து இருந்த முல்லா காலையில எழுந்திருச்சதும் சண்டை போட ஆரம்பிச்சுட்டாரு

நான் விடிய விடிய தூங்காம இருந்து பார்த்துட்டேன் இந்த வீட்டுல யாருமே குறட்ட விடலைனு சொன்னாரு ,உடனே அவுங்க மனைவி சொன்னாங்க நீங்க தூங்கலைள அதான் குறட்ட சத்தம் கேக்கலைனு சொன்னாங்க ,இத எப்படி சமளிக்குறதுனு யோசிச்ச முல்லா ,ஒரு வேல நீ தூங்கும்போது குறட்ட சத்தம் கேக்குற மாதிரி கனவு காணுற போலன்னு சொன்னாரு

ஆமா , குறட்டை சத்தம் கனவுல வந்துச்சுனா பக்கத்து வீட்டு காரங்க வரைக்கும் எப்படி கேட்டுருக்கும்னு சொல்லி முல்லாவ மடக்கிட்டாங்க அவரோட மனைவி ,அடடா இப்ப என்ன செய்யுறதுனு யோசிச்ச முல்லா சொன்னாரு நானும் அதைத்தான் சொன்னேன் இனிமே கனவு கண்டா அமைதியா கனவு காணு , நீ சத்தமா கனவு காணுறதால தான் எல்லாருக்கும் கேக்குதுனு சொன்னாரு

இவறுகூட பேசுனா இப்படியே விதண்டா வாதம் செஞ்சு கிட்டே இருப்பாருனு பேச்சை நிப்பாட்டிட்டு வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சாங்க அவரோட மனைவி
