இணையம் கட்டுரை – Internet Essay in Tamil

Internet Essay in Tamil- இணையம் கட்டுரை :– தற்சமயம் இணையத்தை பயன்படுத்தாதவர்களை கணக்கிடுவது மிக எளிது,கோடிக்கணக்கான மக்கள் தற்சமயம் இணையத்தின் மூலம் புவியை சின்னஞ்சிறிய கிராமம் என சொல்லும் விதத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

Thanks Pexels

இணையம் மிகசிறந்த பயன்களை தரும் வேலையில் அதன்மூலம் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது .முறைப்படுத்த பட்ட இணைய வழி தொடர்புகள் மற்றும் பயன்பாடுகளின்படி மனித கலாச்சாரம் மென்மேலும் தொடர்ந்து இந்த அறிவியல் உலகில் பயணிக்கிறது.

இணையத்தின் பயன் என்ன என்ற கேள்விக்கு இணையத்தை பயன்படுத்தி சாதிக்க முடிந்த அனைத்து சாத்தியங்களையும் கூறலாம்,இணையத்தை பயன்படுத்த தொடங்கியது முதலாக பயனற்று போன அனைத்து நற்செயல்கள் அனைத்தையும் இணைய தீமைகள் என்ற பட்டியலில் பெரும்பாலும் இணைக்க முடிகிறது.

அமர்ந்திருக்கும் இடத்தில இருந்து உலகில் உள்ள அனைத்து மூலைகளிலும் உள்ள தகவல்களை பெற முடிந்த அதே நேரத்தில்,வீட்டின் அருகில் இருக்கும் நன்மையான விஷயங்களை நம் பார்வைக்கு உணராமல் போகின்ற அபாயம் இருக்கத்தான் செய்கிறது.தொடர்ந்து இணையத்தை பயன்படுத்த புதிய புதிய சாதனங்கள் உலகளவில் கண்டுபிடிக்க பட்டு வரும் அதே நேரத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் இணைய பயன்பாடும் தொடந்து அதிகரித்து வருகிறது,உதாரணமாக குழந்தைகள் செல்லிடை பேசியில் தொடர்ந்து இணையத்தை பயன்படுத்த தொடங்கியதை கூறலாம் .

மிக அருகில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்ப்பது எவ்வளவு தீமையானது என்று ஒரு காலத்தில் பாடம் நடத்தி வந்த நாம் தற்சமயம் பாடங்களை செல்லிடை பேசி மூலம் அவர்களது கண்களுக்கு அருகில் கொண்டு சென்று விட்டோம்.

இணையத்தின் நன்மைகள்

  • உலகில் நடக்கும் அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது
  • நண்பர்களுடனும் உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருக்க முடிகிறது.
  • வங்கி மற்றும் அலுவல் பணிகளை இணையத்தின் மூலம் சுலபமாக வீட்டில் இருந்தே செய்து முடிக்க முடிகிறது.
  • கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தடையிண்டு பயில இணையம் மாணவர்களுக்கு உதவியது.
  • மிக குறைந்த அளவே உள்ள புத்தகங்களை நகல் பரிமாண வடிவில் குறைந்த செலவு அல்லது இலவசமாக படிக்க முடிகிறது.
  • தனியாக திறைமைகளை வளர்த்துக்கொள்ள விரும்புபவருக்கு காணொளி மூலமாக புதிய உத்திகளை கொண்டுசேர்க்க முடிகிறது.
  • மருத்துவம் சார்ந்த சந்தேகங்களை இணையம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது
  • தற்சமயம் இணையத்தின் மூலம் பொருட்களை வாங்குவது எளிதாக மாறிவிட்டது

இணையத்தின் தீமைகள்

  • இணையம் மூலம் நடக்கும் வங்கி பரிவர்த்தனைகள் சுலபமாக திருடுபோகும் சூழலும் உண்டு
  • பாடம் மட்டும் பயில நினைக்கும் மாணவர்க்கு சுலபமாக திசைதிருப்பும் துருப்புகள் இணையத்தில் அதிகம்
  • தொடர்ந்து ஒரே இடத்தில அமர்ந்து உடல்நிலையை கெடுத்து கொள்பவர்கள் ஏராளம்
  • கண்பார்வை குறைபாடுகளுக்கு தொடர்ந்து இணையத்தை பயன்படுத்துதல் காரணமாக அமைகிறது.
  • மருத்துவர் துணையின்றி மருந்துகளை பயன்படுத்த தொடங்குவது இணையத்தின் மூலம் சாத்தியம் என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
  • சமூக வலைத்தளங்களில் முறையற்ற தகவல்களையும் , வெறுப்பு உணர்வுகளையும் பகிர கட்டுப்பாடுகள் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை என்பது மிகபெரிய அபாயமாகும்

இணையம் நன்மை தீமைகள்

1 thought on “இணையம் கட்டுரை – Internet Essay in Tamil”

Comments are closed.