The Dogs & and the Hides – நாய்களும் தோல் தொழிற்சாலையும் :- ஒரு கிராமத்துல ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை இருந்துச்சு
அந்த தொழிற்சாலையில நிறய பேரு வேலை பார்த்தாங்க ,அவுங்க தொழிற்சாலைக்கு வரும் ஆட்டு தோல் எல்லாத்தையும் பக்கத்துல ஓடுற ஆத்துல கழுவி காய வைப்பாங்க
அது காஞ்சதும் தொழிற்சாலைகுள்ள எடுத்துட்டு போய்டுவாங்க
அந்த காய போட்ட தோலை எடுத்து திங்கணும்னு பக்கத்துல இருந்த நாய்க்கு ரொம்ப நாளா ஆச
ஆனா தொழிற்சாலையில நிறய பேரு காவலுக்கு இருந்ததால அதுனால ஒன்னும் செய்ய முடியல
ஒருநாள் அதே வேலை ஆட்கள் தண்ணியில தோலை கழுவுறத பாத்துச்சு உடனே அந்த தண்ணிதான ஆறு முழுசும் ஓடுது அத குடிச்சி திருப்தி பாட்டுக்கலாம்னு நினச்சுச்சு நாய்
உடனே நிறய ஆத்து தண்ணிய குடிச்ச நாய் , பேராசையால விடாம ஆத்து தண்ணிய குடிச்சுச்சு
கடைசியா அதோட வயிறு வெடிக்கிற அளவுக்கு தண்ணி குடிச்சுச்சு ,அதனால அந்த நாய்க்கு உடம்பு சரியில்லாம போச்சு
பேராசை பெருநஷ்டமா போச்சு
நீதி : முடியாத காரியங்களைச் செய்ய முயற்சிக்காதீர்கள்