The Owl & the Grasshopper – ஆந்தையும் வெட்டுக்கிளியும் :- ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய மரம் இருந்துச்சு
அந்த பெரிய மரத்தோட பொந்துல ஒரு வயசான ஆந்தை வாழ்ந்துகிட்டு வந்துச்சு
ஒருநாள் காலையில அந்த ஆந்தை தன்னோட பொந்துல தூங்கிகிட்டு இருந்துச்சு
அப்ப அங்க வந்த வெட்டுக்கிளி கிக்கி கிக்கினு கத்திகிட்டே இருந்துச்சு
அப்ப அந்த ஆந்தை சொல்லுச்சு கொஞ்சம் சும்மா இருங்க நான் ஓய்வெடுக்கணும்னு சொல்லுச்சு
அத கேட்ட வெட்டுக்கிளிக்கு கோபம் வந்துடுச்சு ,இந்த மரம் என்ன உனக்கு மட்டும் சொந்தமானு கேட்டு சண்டை போட்டுச்சு
புத்திசாலியான ஆந்தை முகஸ்துதி செய்ய ஆரம்பிச்சுச்சு ,அடடா முதல்ல நீங்க போட்ட சத்தம் இப்ப சங்கீதமா கேக்குதுனு சொல்லுச்சு
ஆந்தையோட பேச்சுல மயங்கிப்போன வெட்டுக்கிளி அன்னைக்கு முழுசும் அங்கேயே இருந்து கத்திகிட்டே இருந்துச்சு
அப்பத்தான் சூரியன் மறைஞ்சு ராத்திரி வந்துச்சு , வெட்டுக்கிளிக்கு கண்ணு சுத்தமா தெரியல ,ஆனா இரவுல வேட்டையாடுற ஆந்தைக்கு நல்லா கண்ணு தெரிஞ்சிச்சு
டக்குனு அந்த வெட்டுக்கிளி மேல குதிச்சு அத நசுக்கி கொன்னுடுச்சு
அப்பத்தான் அந்த வெட்டுக்கிளிக்கு புரிஞ்சது அந்த ஆந்த நமக்கு முகஸ்துதி செஞ்சது நம்மள இரவு வரைக்கும் இங்கயே இருக்க வைக்கத்தானு
நீதி : முகஸ்துதி படுபவரை நம்ப வேண்டாம்