The Wise Child Moral Story in Tamil- புத்திசாலி சிறுவன் :- ஒரு ஊருல ஒரு வயசான தாத்தா இருந்தாரு
அவருக்கு வாழ்க்கையே வெறுத்து போய் இருந்துச்சு ,அதனால் எதுக்கு எடுத்தாலும் குறை சொல்லிகிட்டே இருப்பாரு
தன்னோட உடை நல்லா இல்ல ,தனக்கு மட்டும் கை வலிக்குது , வெயில் ரொம்ப அடிக்குது , ஊர் சுத்தமாவே இல்லைனு எதையாவது நினச்சு வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பாரு
தினமும் தோட்டத்துக்கு நடை பயிற்சி செய்ய போவாரு அந்த தாத்தா , அங்க போயும் பாக்குறவங்க கிட்ட எல்லாம் பொலம்பிகிட்டே இருப்பாரு
ஒருநாள் ஒரு சாமியாரை பார்த்தாரு அந்த தாத்தா ,அவருகிட்ட ஏன் என் வாழ்க்கை இப்படி இருக்குனு கேட்டாரு
அதுக்கு அந்த சாமியார் சொன்னாரு சின்ன சின்ன குழந்தைகள் கூட உலகத்தை ரசிக்கிறாங்க ,ஆனா வயசான நீங்க இப்படி பொலம்புறது தப்பு ,குழந்தைகள் தான் உங்களுக்கு அறிவுரை சொல்ல தகுதியானவங்கனு சொல்லிட்டு போய்ட்டாரு அவரு
அப்ப அங்க ஒரு குட்டி பையன் வந்தான் , அவன்கிட்டயும் பொலம்ப ஆரம்பிச்சாரு அந்த தாத்தா
அப்ப அந்த பையன் சொன்னான் உங்க வாழ்க்கையில நல்ல நிகழ்வுகளே நடக்கலையானு கேட்டான் ,அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு எதோ கொஞ்சம் நடந்திருக்குனு சொன்னாரு
உடனே அந்த பையன் சொன்னான் அந்த கொஞ்சத்த இப்ப கண்ண மூடிக்கிட்டு நினச்சு பாருங்கன்னு சொன்னான்
உடனே அந்த தாத்தா கண்ண மூடிக்கிட்டு தன்னோட வாழ்க்கையில தனக்கு சொந்தோசம் கொடுக்குற எல்லாத்தையும் நினச்சு பார்க்க ஆரம்பிச்சாரு
தான்னோட கல்யாண வாழ்க்கை , தனக்கு கிடைக்குற உணவு , இயற்கயான பகுதியில தான் வாழுற வாழ்க்கைனு எல்லாத்தையும் நினச்சு பார்த்தாரு, அவருக்கு திரும்பவும் சந்தோசம் கிடைச்சுச்சு
நடந்த சந்தோஷமான நிகழ்வுகளை நினச்சு பார்க்கவே நமக்கு சந்தோசமா இருக்கு ,இத விட்டுட்டு நடந்து போன கெட்ட நிகழ்வுகளையும் , நடக்குற கெட்ட நிகழ்வுகளையும் மனசுல நினச்சு வறுத்த படுறது ரொம்ப தப்புனு புரிஞ்சிக்கிட்டாரு
கண்ண திறந்து சொன்னாரு ,எது எப்படியோ நான் கொஞ்ச நேரம் சந்தோசமா இருந்தேன் ,என்னோட மனசு இப்ப லேசா இருக்கு
இனிமே நான் தேவையில்லாத காரணத்துக்கு வருத்தப்பட மாட்டேன் ,எனக்கு உதவி செஞ்சதுக்கு நன்றின்னு அந்த பையன்கிட்ட சொன்னாரு