Darkness Below A Lamp-Akbar Birbal Story-விளக்கின் இருட்டு :-ஒருநாள் அதிகாலை அக்பரும் பீர்பாலும் யமுனா நதிய ஒட்டி சூரியன் உதிக்கிறத பார்த்துகிட்டு இருந்தாங்க
சூரியனோட கத்தி யமுனா நதியில பட்டு ஜொலிக்கிறத ரெண்டுபேரும் அமைதியா பாத்துகிட்டு இருந்தாங்க
அப்ப திடீர்னு ஒரு சத்தம் கேட்டுச்சு ,ரெண்டுபேரும் சத்தம் கேட்ட திசைல பார்த்தாங்க ,அங்க ஒரு மாட்டு வண்டியில வந்த வணிகர்கிட்ட நாலு திருடர்கள் திருடிட்டு ஓடிக்கிட்டு இருந்தாங்க
அந்த வணிகர் காப்பாத்துங்கனு சத்தம் போட்டுகிட்டு இருந்தாரு
இத பார்த்த அரசருக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு ,உடனே அரண்மனை காவலர்கள கூப்பிட்டு அந்த திருடர்களை பிடிக்க சொன்னாரு
அவுங்க போறதுக்குள்ள அந்த திருடர்கள் ஓடி ஒளிஞ்சு கிட்டாங்க
இத கேட்ட அக்பருக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு ,என் ஆட்சி சாமானியருக்கு துன்பம் வர்ற அளவுக்கா இருக்கு ,அதுவும் என் அரண்மனைக்கு பக்கத்துல ,நான் வாழுற நகரத்துல இப்படி திருட்டு நடக்குதேன்னு ரொம்ப வருத்தப்பட்டு பீர்பால் கிட்ட சொன்னாரு
அரசே உங்க ராஜ்யம் மிகப்பெரிய ராஜ்யம் ,உங்க பேர கேட்டு திருந்துன திருடர்கள் ஏராளம் ,உங்க ஆட்சியில திருட்டு நடக்காதுனு இந்த ஊர விட்டு போன கயவர்கள் ஏராளம்
இந்த ஒரு சின்ன நிகழ்வ வச்சு மொத்த சாம்ராஜ்யத்தையும் எடை போட வேண்டாம்
இருளில் வெளிச்சம் தர்ற விளக்கோட அடிப்பகுதியில் கூட இருட்டு இருக்கத்தான் செய்யும்னு ஆறுதல் சொன்னாரு
இத கேட்டு ஆறுதல் அடைஞ்ச அக்பர் ,மேலும் பல காவலர்களை வேலைக்கு சேர்த்து நாட்டுலே இருக்குற திருடர்கள் எல்லாரையும் பிடிச்சி சிறைல போட்டாரு