The Emperor’s Value – அரசரின் மதிப்பு-Akbar Birbal Story:-அக்பர் ஒருநாள் நகரஉலாவுக்கு போனாரு ,அப்படி போகும்போது அங்க ரெண்டு பேரு சண்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க
அதுல ஒருத்தர் சொன்னாரு என்னோட மதிப்பு என்னனு உனக்கு தெரியல ,அதுக்கான நேரம் வரும் அப்ப என்னோட மதிப்பு உனக்கு புரியும்னு சொன்னாரு
இத கேட்ட அக்பருக்கு ஒரே ஆவலா போச்சு அப்ப என்னோட மதிப்பு என்னனு அவருக்கு தோணுச்சு
உடனே அரண்மனை வந்த அக்பர் அரசவைக்கு வந்து அந்த கேள்வியை கேட்டாரு
அங்க இருந்த எல்லாரும் உடனே இது என்ன பொற்கொல்லர் வேலையா இருக்குனு சொன்னாங்க ,அப்ப பொற்கொல்லர்கள் ஒருத்தரோட மதிப்ப சொல்லிடுவாங்கலானு கேட்டாரு
இத பிரச்சனைல இருந்து தப்பிக்க நினச்சா எல்லாரும் ,அவுங்க தான் தங்கத்தையே மதிப்பீடு செய்றவங்க அவுங்கள கூப்பிட்டு கேளுங்கன்னு சொன்னாங்க
உடனே அந்த நகரத்துல இருந்த எல்லா பொற்கொல்லர்களையும் கூப்பிட்டாரு அரசர் ,அவுங்க கிட்ட என்னோட மதிப்பு என்னனு கேட்டாரு அரசர்
அந்த கொல்லர்களுக்கு ஒண்ணுமே புரியல இருந்தாலும் அரசே எங்களுக்குஎட்டுநாள் அவகாசம் வேணும்னு கேட்டாங்க
இத கேட்ட அரசருக்கு கோபம் வந்துடுச்சு ,அப்ப எட்டு நாளும் அரண்மனை காவல்ல இருங்கனு சொல்லிட்டு போய்ட்டாரு
இத பார்த்த பீர்பாலுக்கு அவுங்களுக்கு உதவணும்னு தோணுச்சு ,ராத்திரி அந்த பொற்கொல்லர்களை பார்த்து ஒரு யோசனை சொன்னாரு
அதுபடி ஒரு பைல 100 தங்க நாணயங்களை போட்டு அரண்மனைக்கு கொண்டுவந்தாரு ,அதுல ஒரு நாணயம் மட்டும் எடை கூட போட்டுருந்தாரு பீர்பால்
மறுநாள் அந்த பொற்கொல்லர்கள் உங்களுக்கு பதில் சொல்ல தாயாகிட்டதாகவும் அவுங்களுக்கு உதவ அவுங்க சொன்னமாதிரி தான் இந்த பைல தங்க நாணயம் கொண்டுவந்திருப்பதாவும் சொன்னாரு பீர்பால்
அப்ப என்னோட மதிப்பு இப்ப தெரிஞ்சிடுமான்னு கேட்டாரு அக்பர்
உடனே பீர்பால் அந்த பொற்கொல்லர்கள் கிட்ட அந்த பைய கொடுத்தாரு ,உடனே அவுங்க எல்லாரும் தங்களோட கருவிகளை வைத்து ஆரஞ்சாங்க
கடைசியா அந்த மதிப்பு மிக்க தங்க நாணயத்தை எடுத்து அக்பர் கிட்ட கொடுத்து இதுதான் உங்க மதிப்புனு சொன்னாங்க
இதே கேட்ட அக்பருக்கு கோபம் வந்துடுச்சு இது என்ன ஒரு பெரிய தங்க நாணயத்தோட மதிப்புதான் எனக்காணு கேட்டாரு
அப்பதான் பீர்பால் பேச ஆரம்பிச்சாரு ,அரசே இந்த பெரிய தங்க நாணயம் மதிப்பு குறைச்சலா இருக்கலாம் ,ஆனா மத்த நாணயங்களோட ஒப்பிடும்போது இதோட மதிப்பு கூட
அதுமாதிரிதான் சாமானிய மக்களோட ஒப்பிடும்போது ,உங்களோட மதிப்பு இன்னும் அதிகம் ,சிற்றரசர்கள் கிட்ட ஒப்பிடும்போது நீங்க ஒருபடி மேல் , வீரர்களோட ஒப்பிடும்போது உங்களுக்கு இன்னும் அதிக மதிப்புனு சொன்னாரு
அப்பத்தான் அரசரா இருக்குற தனக்கு ஒரு மதிப்பு ,அந்த மதிப்பு மத்தவங்கலொட ஒப்பிடும்போதுதான்னு புரிச்சிக்கிட்டாரு