Birbal’s Justice – பீர்பாலுக்கு தண்டனை – Akbar Birbal Short Stories:-பீர்பாலுக்கு ஒருநாள் ஒரு சந்தேகம் வந்துச்சு , தான் தன்னோட வாழ்நாள்ல ஏதாவது தவறு செஞ்சா தனக்கு என்ன தண்டனை கிடைக்கும்னு தோணுச்சு
உடனே அரசர்கிட்ட இத பத்தி பேசுனாரு ,அதுக்கு அரசர் தப்பு செஞ்சது நீயா இருந்தா எல்லாருக்கும் குடுக்குற தண்டனைய விட அதிகமா கொடுப்பேன்னு சொன்னாரு
ஒரு வேல யாரையும் புண்படுத்தாத சின்ன தப்பு ஏதாவது நான் சென்சேன்னா நான் சொல்ற ஆளுங்கள வச்சுதான் எனக்கு தண்டன கொடுக்கனுன்னு சொன்னாரு
அக்பரும் அதுக்கு சரினு சொன்னாரு ,அதுக்கு அப்புறமா ஒருநாள் அக்பர் கால தெரியாம மிதிச்சிட்டாரு பீர்பால்
உடனே அரண்மனைல இருந்த எல்லாரும் அவருக்கு தண்டனை கொடுக்கணும்னு சொன்னாங்க
ஆனா இது சாதாரண விஷயம் இதுக்குபோயி தண்டனையானு யோசிச்ச அரசருக்கு முன்னாடி பீர்பால் கேட்டது ஞாபகத்துக்கு வந்துச்சு
உடனே பீர்பால் அவர்களே நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கான தண்டனைய நீங்க சொல்ல்ற ஆள வச்சே கொடுத்துக்கோங்கன்னு சொன்னாரு
உடனே பீர்பால் அந்த ஊருல இருக்குற மிக மோசமான கஞ்சன் ஒருத்தனை கூட்டிகிட்டு வர சொன்னாரு
அவர் கிட்ட இந்த தப்புக்கு தண்டனை கொடுக்க சொன்னாங்க
உடனே அவர் பத்து ரூபா அபராதம் மட்டும் விதிச்சாரு
பீர்பலும் அத கட்டிட்டாரு ,கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அக்பர் கேட்டாரு ஏன் அந்த கஞ்சன் வெறும் பத்து ரூபா மட்டும் தண்டனையா கொடுத்தானு கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு ,பணத்தை செலவழிக்காம வச்சு வச்சு அவனோட மூளையே அப்படி மாறிடுச்சு ,யார் பணத்தை விரயம் பண்ணினாலும் ஏன் செலவு செஞ்சாக்கூட அத தடுக்குற புத்தி அவனுக்கு வந்திடுச்சு அதான் எனக்கு வெறும் பத்து ரூபா மட்டும் அபராதம் கொடுத்தான்னு சொன்னாரு
அப்பத்தான் அரசருக்கு புரிஞ்சது விஸ்தாரமான எண்ணங்களும் ,முடியும்ங்கிற நம்பிக்கையும் உள்ளவங்க நிறய சாதிப்பாங்கனு