சீனத்து மண் அக்பர் பீர்பால் கதை- Foot On the Land-Akbar Birbal Story in Tamil-அக்பரின் அரசவையில இருக்கிறப்ப ஒருநாள் மஹாராணி கூப்பிட்டதா சொல்லி ஒரு காவலன் வந்தான்
நிறைய வேலை இருக்கு அப்புறமா வரேன்னு சொல்லி அனுப்பிச்சாரு அக்பர் ,ஆனா தொடர்ந்து காவலாளிகள அனுப்பிச்சு அக்பர வர சொன்னாங்க மஹாராணி
நிறய வேலை இருக்கிறப்ப அக்பர் போக விருப்பம் இல்லைனாலும் மகாராணிய பாக்க கிளம்புனாரு
இத அங்க இருந்த மந்திரிகள் விரும்பலனாலும் அமைதியா இருந்தாங்க ,ஆனா பீர்பால் மட்டும் களுக்குனு சிரிச்சாரு
பீர்பால் தன்னை கிண்டல் பன்றாருனு புரிஞ்சிக்கிட்டடாறு பீர்பால்
உடனே அரசர் பீர்பால் இனிமே இந்நாட்டு மண்ணை மிதிக்க கூடாதுனு அறிவிச்சாரு
இதைக்கேட்ட பீர்பாலுக்கு ரொம்ப கவலையா போச்சு
கொஞ்ச நாளுக்கு அப்புறமாதான் அக்பருக்கு புரிஞ்சது பீர்பால அனுப்பிச்சதாள அரசாங்க வேலை எல்லாம் முடியாம இருக்கு
இருந்தாலும் தான் கொஞ்சம் அவசரப்படாம இருந்திருக்கலாம்னு அவருக்கு தோணுச்சு
தான் செஞ்சது தவறு ,பீர்பால் மேல தப்பு இருந்தாலும் அவரை விசாரிக்கம வெளியில அனுப்பிச்சது தப்புனு உணர்ந்தார்
உடனே குதிரையில் ஏறி பீர்பாலோட வீட்டுக்கு போனாரு
அங்க வீட்ட சுத்தி விசித்திரமான கலர்ல மண் கொட்டப்பட்டு இருந்துச்சு
இதப்பாத்த அரசருக்கு ஒண்ணுமே புரியல ,அப்பத்தான் பீர்பால் வீட்ட விட்டு வெளியில வந்தாரு ,அவரு கிட்ட மன்னிப்பு கேட்ட அக்பர் இது என்ன விசித்திரமான மண் இங்க கொட்டி வச்சிருக்கீங்கனு கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு அரசரே நான் உங்களுடைய கட்டளைய எப்போதும் மீறாதவன் ,நீங்க இந்த நாட்டோட மண்ணை மிதிக்க கூடாதுனு சொன்னிங்க அதான் சீனாவுல இருந்து கொண்டுவரப்பட்ட பாலைவனத்து மண்ணை இங்க கொட்டி அதுல நடந்துகிட்டு இருக்கேனு சொன்னாரு
புத்திசாலியான பீர்பாலோட அறிவோட ,தன் கட்டளையை கடைபிடிக்க விசுவாசத்தையும் ரொம்ப பாராட்டுனாரு அக்பர்